Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவசரப்பட்டு வெளியே அனுப்பி விட்டோமே.. டெல்லி அணி சோகம்.. அமெரிக்காவில் சம்பவம் செய்த ரிக்கி பாண்டிங்

டல்லாஸ் : மேஜர் கிரிக்கெட் லீக் தொடர் சாம்பியன் பட்டத்தை ரிக்கி பாண்டிங் பயிற்சி வழங்கிய வாஷிங்டன் பிரீடம் அணி கைப்பற்றி இருக்கிறது. டல்லாஸ் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வாஷிங்டன் அணியும், சான் பிரான்சிஸ்கோ அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் பிரீடம் அணியில் கேப்டன் ஸ்டீல் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் அடங்கும்.

MLC 2024 Major cricket League 2025

கிளான் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இது நான்கு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும். 20 ஓவர் முடிவில் வாஷிங்டன் பிரீடம் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களம் இறங்கிய சான் பிரான்சிஸ்கோ கடுமையாக தடுமாறியது.

பேட்டிங்கில் எந்த ஒரு வீரரும் இருபது ரன்களை தாண்டவில்லை. இதனால் 16 ஓவர் முடிவில் 111 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட வாஷிங்டன் ஃப்ரீடம் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. டெல்லி அணி தற்போது தான் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக சரியில்லை எனக் கூறி அவரை விலக்கியது.

இந்த நிலையில் அமெரிக்காவில் தான் பயிற்சி கொடுத்த வாஷிங்டன் அணி சம்பவம் செய்து இருக்கிறது. இதன் மூலம் உலக கிரிக்கெட்டில் தான் யார் என்பதை மீண்டும் ஒருமுறை ரிக்கி பாண்டிங் நிரூபித்து இருக்கிறார். இதனால் ரிக்கி பாண்டிங் தற்போது ஐபிஎல் அணிகளுக்கு மத்தியில் கடும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. பலரும் ரிக்கி பாண்டிங்கை தங்கள் அணிக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.குறிப்பாக ராஜஸ்தான், லக்னோகுஜராத் போன்ற அணிகள் ரிக்கி பாண்டிங் சேர்க்க முயற்சி செய்து வருகிறது.

Story first published: Monday, July 29, 2024, 17:07 [IST]
Other articles published on Jul 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+