Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MLC 2025: 13 சிக்சர்.. 49 பந்தில் 106 ரன்கள் விளாசிய கிளன் மேக்ஸ்வெல்.. வாசிங்டன் அபார வெற்றி

ஓக்லாந்து: அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி டி 20 தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டன் கிளன் மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 106 ரன்கள் விளாசினர். இதில் 11 சிக்சர்களை விளாசி இருக்கிறார். ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய மிட்செல் ஓவன் 11 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். ஆண்டிரிஸ் கவுஸ் 12 ரன்களும், மார்க் சாப்மேன் 17 ரன்களும், ரச்சின் ரவீந்திரா நான்கு பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்தார்.

Glenn Maxwell

ஜாக் எட்வேர்ட்ஸ் 11 ரன்களில் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து வாஷிங்டன் சுந்தர் அணி தடுமாறியது.இந்த சூழலில் களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளாக மேக்ஸ்வெல் தன்னுடைய பழைய பார்மை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்தார்.

இன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் முதல் 15 பந்துகளில் 11 ரன்கள் தான் எடுத்தார். அதன் பிறகு மேக்ஸ்வெல் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
சிக்சர், பவுண்டரிகளை அவர் பறக்க விட்டார். இதை அடுத்து 34 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். இதில் 14 சிக்சர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 49 பந்துகளில் மேக்ஸ்வெல் 106 ரன்கள் குவித்தார்.

மேக்ஸ்வெல் மட்டும் தனி ஆளாக நின்று நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். இதன் மூலம் வாஷிங்டன் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தார்.இதை அடுத்து களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் தொடக்க மூன்று வீரர்களும் டக் அவுட் ஆனார். இதை அடுத்து சயிப் பதர் 32 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டிரூ ரசில் 4 ரன்களும், ரோமன் பொவேல் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் ஜேசன் ஹோல்டர் 23 ரன்கள் எடுத்தார்.

இதனால் 16.3 ஓவரில் 95 ரன்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் பந்துவீச்சில் மிட்செல் ஓவன் மற்றும் ஜாக் ஏட்வேர்ட்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வீரரான சௌரப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Wednesday, June 18, 2025, 11:47 [IST]
Other articles published on Jun 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+