Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MLC 2025: கடைசி ஓவரில் 9 ரன்.. திக் திக் மேட்ச்சில் மும்பை இந்தியன்ஸ்-ஐ வீழ்த்திய சூப்பர் கிங்ஸ்!

கலிபோர்னியா: 2025 மேஜர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. டேரில் மிட்செல் செய்த ஒரு ரன் அவுட் மற்றும் கேப்டன் டூப்ளசிஸ் பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஜவான் ராவ் 44 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டூப்ளசிஸ் 15 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

MLC 2025 texas super kings mumbai indians new york Faf du Plessis Daryl Mitchell

அதன் பிறகு மற்ற வீரர்கள் சொற்ப ரன்களை எடுத்தனர். ஏழாம் வரிசையில் இறங்கிய கால்வின் சேவேஜ் என்ற அனுபவம் குறைந்த வீரர் அதிரடியாக ஆடினார். அவர் 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதை அடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி விளையாடத் துவங்கியது. அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் இருந்ததால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணி ஏமாற்றத்தையே அளித்தது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் அக்னி சோப்ரா 5 ரன்களிலும், டி காக் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது வரிசையில் இறங்கிய மோனாங் படேல் 44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். நிக்கோலஸ் பூரன் 6 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

மைக்கேல் பிரேஸ்வெல் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது, டூப்ளசிஸ் பிடித்த அற்புதமான கேட்ச்சில் அவர் ஆட்டமிழந்தார். மேலும், கிரண் பொல்லார்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது ரன் அவுட் ஆனார். அவர் சாவகாசமாக ஓடிச் சென்றது திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களை எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. அதே சமயம் களத்தில் தாஜிந்தர் தில்லான் மற்றும் நவீன் உல் ஹக் என இரண்டு பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், டேரில் மிட்செல் அபாரமாக பந்துவீசி கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதை அடுத்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, June 14, 2025, 14:09 [IST]
Other articles published on Jun 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+