Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MLC 2025: சிஎஸ்கே தம்பி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.. நைட் ரைடர்ஸ் அணியை பொளந்தது

ஓக்லாந்து: அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள அணிகளை ஐபிஎல் அணிகள் வாங்கி இருப்பதால் இந்த போட்டி இந்திய ரசிகர்களின் மத்தியிலும் பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கின்றது.

அதுவும் பேஸ் பால் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதால் இது ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை தருகின்றது. இந்த நிலையில் ஓக்லாந்து கொலாஷியம் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வின் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், கேகேஆர் அணியின் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

TSK vs Los Angeles Knight riders

இதில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் கான்வே மற்றும் டுபிளசிஸ் ஆகியோர் அதிரடியாக முற்பட்டனர்.

டுபிளசிஸ் ஒரு சிக்சருடன் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடிய கான்வே, நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் நடு வரிசையில் சாய்தேஜா முக்காமலா மற்றும் டேரல் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இதில் டேரல் மிட்செல் நிதானமாக விளையாட சாய்தேஜா 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் அடங்கும். இதே போன்று இறுதியில் சுபம் ரஞ்ச்னே 24 ரன்களும், டோனொவன் பெரேரியா 16 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் சுனில் நரைன் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ஆனால் மற்றொரு வீரரான ஆண்டிரூ ரஸில் நான்கு ஓவருக்கு 53 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.

இதனை அடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்கவீரர் அண்டரூ பிளேச்சர் இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க அலெக்ஸ் ஹெல்ஸ் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார்.பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 25 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதேபோன்று முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டனான உன்முகுத் சந்த் 22 ரன்களில் ஆட்டம் இழக்க மேத்யூ ட்ரோம்ப் 23 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரேன் டக்அவுட் ஆக, ரஸில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். இறுதியில் அலிகான் 16 ரன்களும் சேட்லி 27 ரன்கள் எடுக்க லாஸ் ஏஞ்சலிஸ் நைட் ரைடர்ஸ் அணி 17.1 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்து வீசிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் நூர் அகமத் நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Monday, June 16, 2025, 12:06 [IST]
Other articles published on Jun 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+