Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி பந்தில் சிக்ஸ்.. உடைந்து போன பொல்லார்ட்.. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ஷிம்ரான் ஹெட்மயர்

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) டி20 தொடரில், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வீழ்த்தி சியாட்டில் ஆர்காஸ் அணி "திக் திக்" வெற்றியைப் பதிவு செய்தது. சியாட்டில் ஆர்காஸ் அணியின் வெற்றிக்கு ஷிம்ரான் ஹெட்மயர் முக்கியப் பங்காற்றினார்.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி அதிரடியாக ஆடியது. அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 60 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்தார். அவர் ஏழு பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை அடித்திருந்தார். அவரை விட அதிரடியாக ஆடினார் தாஜிந்தர் தில்லான். அவர் வெறும் 35 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்தார்; எட்டு பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்து, 271 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டினார். இதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.

MLC T20 Cricket Shimron Hetmyer MI New York Seattle Orcas

அடுத்து சியாட்டில் ஆர்காஸ் அணி விளையாடியது. அந்த அணி தான் விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்ததால், இந்த பெரிய இலக்கை அந்த அணியால் எட்ட முடியாது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும், ஐந்து போட்டிகளில் அடைந்த தோல்வியால் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹென்ரிச் கிளாசன் பதவி விலகியிருந்தார். அவருக்குப் பதிலாக ஜிம்பாப்வே அணியின் மூத்த வீரர் சிக்கந்தர் ராசாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் போட்டியில் மூன்றாம் வரிசையில் இறங்கிய சியாட்டில் ஆர்காஸ் வீரர் கெய்ல் மேயர்ஸ் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். கேப்டன் சிக்கந்தர் ராசா நான்காம் வரிசையில் இறங்கி வெறும் 9 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். அவர் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்திருந்தார். அவர் சந்தித்த ஒன்பது பந்துகளில் 7 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். அடுத்து ஹென்ரிச் கிளாசன் 13 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வரிசையாக விக்கெட் விழுந்ததால், சியாட்டில் ஆர்காஸ் அணி அழுத்தத்தில் இருந்தது. அப்போது ஆறாம் வரிசையில் இறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர், போட்டியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அதிரடி ஆட்டத்தை ஆடினார். அப்போது கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவை என்ற நிலையில், இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது சியாட்டில் அணி.

அந்த அணி ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், கடைசி ஓவரை ஜஸ்தீப் சிங் சந்தித்தார். அவரால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்காக கீரோன் பொல்லார்ட் பந்து வீசினார். அவர் வீசிய முதல் மூன்று பந்துகளில் ஜஸ்தீப் சிங் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். நான்காவது பந்தில் ஸ்ட்ரைக் மாறியது.

ஷிம்ரான் ஹெட்மயர் அப்போது பந்தை சந்தித்தார். அவர் மூன்று பந்துகளில் 8 ரன்களை சேர்த்து சியாட்டில் அணியை வெற்றி பெற வைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் தான் வெற்றி என்ற நிலைமை இருந்தது. அப்போது அவர் சிக்ஸ் அடித்து சியாட்டில் ஆர்காஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

சரியாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து சியாட்டில் அணி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சிறப்பாக செயல்பட்டும் கடைசி பந்தில் தோல்வியடைந்தது. ஷிம்ரான் ஹெட்மயர் 40 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து சியாட்டில் ஆர்காஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

Story first published: Saturday, June 28, 2025, 12:04 [IST]
Other articles published on Jun 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+