Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி அன்ட் கோவுக்கு சுவாரஸ்யமாக வாழ்த்து தெரிவித்த மோடி

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் நாடு திரும்புமாறு பிரதமர் நரேந்திர மோடி டோணி தலைமையிலான அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று துவக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி டோணி தலைமையிலான அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

டோணி

டோணி

கூல் கேப்டன் டோணிக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பாக விளையாடுங்கள், தலைமை தாங்கி இந்தியாவை பெருமை அடையச் செய்யுங்கள். நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும்.

கோஹ்லி

கோஹ்லி

துணை கேப்டன் விராத் கோஹ்லிக்கு எனது வாழ்த்துக்கள். மொத்த நாடும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

வாழ்த்துக்கள் ஷிகர் தவான்! ஒவ்வொரு முறையும் மைதானத்திற்குள் செல்லும்போது சிறப்பான துவக்கத்தை தாருங்கள். அதிக ரன்கள் எடுங்கள். உங்களை ஊக்குவிக்க நாங்கள் உள்ளோம்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா. அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எங்களை மீண்டும் பெருமையடையச் செய்யுங்கள்.

ரஹானே

ரஹானே

என் இளம் நண்பர் ரஹானேவுக்கு வாழ்த்துக்கள். இந்த உலகக் கோப்பை போட்டிகள் சிறப்பானதாக இருக்கட்டும். வாய்ப்பை முடிந்த அளவுக்கு பயன்படுத்துங்கள்.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா எப்பொழுதுமே மைதானத்தில் மிகவும் சுறுசுறுப்பாக சுற்றி வருவார். பேட்டை எடுத்தால் சிறப்பாக அடிப்பார். பவுன்சர்கள் உள்பட அனைத்தையும் பார்க்கிற்கு வெளியே அடியுங்கள் ரெய்னா.

ராயுடு

ராயுடு

அருமையான போட்டியாக அமையட்டும் ராயுடு அம்பாட்டி. நீங்கள் அதிக ரன்கள் எடுத்து இந்த தொடரில் முக்கிய பங்காற்றுவீர்கள் என்று நாம் நம்புகிறேன்.

சர் ஜடேஜா

சர் ஜடேஜா

யார் தான் சர் ஜடேஜாவின் ரசிகர் இல்லை? இந்தியா வெற்றி பெற உங்களின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளோம்.

அக்சார் பட்டேல்

அக்சார் பட்டேல்

இளம் அக்சார் பட்டேல் தனது ஸ்பின் மற்றும் பவுன்சால் பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். சிறப்பாக விளையாடுங்கள்.

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

வாழ்த்துக்கள் புவனேஸ்வர் குமார். ஒவ்வொரு போட்டியும் நமக்கு சாதகமாகும் வகையில் விளையாடுங்கள். உங்களின் ஆட்டம் நாம் எவ்வளவு வேகத்தில் இந்த போட்டிகளை வெல்வோம் என்பதை தீர்மானிக்கும்.

மோஹித் சர்மா

மோஹித் சர்மா

நம் இளம் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா அணிக்கு கிடைத்த சொத்து. வாழ்த்துக்கள்.

முகமது ஷமி

முகமது ஷமி

திறமை வாய்ந்தவரான இளம் நண்பர் முகமது ஷமிக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை கைப்பற்றுங்கள்.

ஸ்டூவர்ட் பின்னி

ஸ்டூவர்ட் பின்னி

ஸ்டூவர்ட் பின்னியின் அண்மை கால ஆல்ரவுண்ட் ஆட்டம் அனைவரையும் அசத்தியுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

குட் லக் உமேஷ் யாத்வ். உங்களின் வேகம் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங்கால் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குங்கள்.

அஸ்வின் ரவிச்சந்திரன்

அஸ்வின் ரவிச்சந்திரன்

உங்களின் ஸ்பின் பவுலிங் பேட்ஸ்மேன்களை வியக்க வைத்து நமக்கு வெற்றி அளிக்கும். சிறப்பாக விளையாடுங்கள் அஸ்வின் ரவிச்சந்திரன். என் வாழ்த்துக்கள்.

Story first published: Friday, February 13, 2015, 10:31 [IST]
Other articles published on Feb 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+