For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே வீரருக்கு ஐசிசி அபராதம்.. 2 ஆண்டுகள் கழித்து வந்தவருக்கு ஏற்பட்ட சோகம்..அப்படி என்ன செய்தார்

பிர்மிங்காம் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மொயின் அலிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான மோயின் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு தொடர்ந்து டி20 கிரிக்கெட்களில் கவனம் செலுத்தி வந்த மோகினி தற்போது ஆக்ஸிஸ் தொடருக்காக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் திரும்பியிருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்குல்லம் விடுத்த அழைப்பின் பேரிலே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Moeen ali fined for applying spray in first ashes test

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 29 ஓவர்களை வீசிய மோயின் அலி 124 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் 89 வது ஓவரின் போது மோயின் அலி கையில் வியர்வை ஏற்படாமல் இருப்பதற்காக ஸ்பிரே ஒன்றை போட்டுள்ளார். அந்த ஸ்ப்ரே பந்தின் தரத்தையோ பந்தின் செயல்பாட்டையும் மாற்றவில்லை என்றாலும் நடுவரின் அனுமதி இன்றி அதை போட்டுக் கொண்டதால் மோயின் அலிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25% அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

ஐசிசி விதியின் படி எந்த ஒரு திரவியத்தையும் நடுவரின் அனுமதி இல்லாமல் வீரர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் மோயின் அலிக்கு மைனஸ் ஒரு புள்ளி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மோயின் அலி மூன்று மைனஸ் புள்ளிகளை பெற்றால் அவருக்கு இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.

இதேபோன்று ஒரு சர்ச்சையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் சிக்கினார். கையில் வலி ஏற்பட்டதற்காக ஆயில்மெண்ட் ஒன்றை ஜடேஜா தடவினார்ம் ஆனால் நடுவரின் முன் அனுமதி வாங்கவில்லை என்று கூறி ஜடேஜாவுக்கும் ஐசிசி அபராதம் விதித்து மைனஸ் புள்ளிகளை வழங்கியது. இதற்கு இந்திய கிரிக்கெட் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Story first published: Sunday, June 18, 2023, 19:41 [IST]
Other articles published on Jun 18, 2023
English summary
Moeen ali fined for applying spray in first ashes test சிஎஸ்கே வீரருக்கு ஐசிசி அபராதம்.. 2 ஆண்டுகள் கழித்து வந்தவருக்கு ஏற்பட்ட சோகம்..அப்படி என்ன செய்தார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+