Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ஆட்டத்தை காட்டிய மொயீன் அலி..கடைசி 4 ஓவர்களில் பறந்த சிக்ஸர் மழை.. நியூஸி,க்கு சவலான இலக்கு

அமீரகம்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து கடைசி நேர அதிரடியால் சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் லீக் போட்டிகள் முடிந்து தற்போது அரையிறுதி சுற்றை எட்டியுள்ளது.

இதில் முதல் அரையிறுதிப்போட்டியாக இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்றன.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அமீரக களத்தில் முதலில் பவுலிங் செய்வது சாதகமாக இருக்கும். அதன்படியே இன்றும் இங்கிலாந்து அணியால் தொடக்க ஓவர்களில் ரன்களை அடிக்க முடியவில்லை. தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

கடினமான ஃபீல்டிங்

கடினமான ஃபீல்டிங்

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அவர்களால் சீரான வேகத்தில் ரன்களை குவிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் நியூசிலாந்து பவுலர்களா என்பது போல ஃபீல்டிங் கடினமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால் டேவிட் மாலன் 42 ரன்களுக்கும், பட்லர் 29 ரன்களுக்கும் வெளியேறினார். 15 ஓவர்களில் 116 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கடைசி 4 ஓவர்

கடைசி 4 ஓவர்

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியும் இப்படி தான் திணறியது. இதனால் இங்கிலாந்து அணியும் குறைந்த ஸ்கோரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை கடைசி 4 ஓவர்களில் மாற்றி அமைத்தார் மொயீன் அலி. 37 பந்துகளை சந்தித்த அவர், 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த லியாம் லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 17 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 47 ரன்களை சேர்த்தது.

சவாலான இலக்கு

சவாலான இலக்கு

சார்ஜா மைதானத்தில் 166 என்பது சவாலான இலக்காக தான் பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணி பவுலிங்கை போன்று பேட்டிங்கில் பலமானதாக பார்க்கப்படவில்லை. அந்த அணியில் டாப் 2 விக்கெட்களை எடுத்தால் சுலபமாக அணியை சரித்துவிடலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கேற்றார் போல இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஜோர்டன், அடில் ரஷித் என தரமான பவுலர்கள் களமிறங்குகின்றனர்.

Story first published: Wednesday, November 10, 2021, 21:36 [IST]
Other articles published on Nov 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+