Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் ஆல் டைம் கிரேட் அணி என்றால் இது தான்.. மொயின் அலி தேர்வு செய்த 11 வீரர்கள்

லண்டன் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். காரணம் இந்திய அணி கேப்டனாக இருந்த தோனி தான் சென்னை அணியை முதல் சீசனில் இருந்து வழி நடத்தினார்.

இது மட்டுமல்லாமல் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு சீசனிலுமே சரியான 11 வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் தோனியே தடுமாறுவார்.

Moeen ali picks csk all time team - star players missing from the ist

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி வீரர்களைக் கொண்ட ஆல் டைம் கிரேட் என்ற அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி தேர்வு செய்திருக்கிறார்.அதனை தற்போது பார்க்கலாம். மொயின் அலி தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட்டையும், ஆஸ்திரேலிய வீரர் வாட்சனையும் தேர்வு செய்திருக்கிறார். இதேபோன்று மூன்றாவது வீரராக சின்ன தல ரெய்னாவுக்கும் மொயின் அலி இடம் கொடுத்திருக்கிறார்.

நடுவரிசையில் நான்காவது வீரராக ராயுடுவுக்கும், ஐந்தாவது வீரராக மைக்கேல் ஹசிக்கும் மொயின் அலி இடம் கொடுத்திருக்கிறார். கேப்டன் தோனிக்கு ஆறாவது இடமும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஏழாவது இடத்தையும் மொயின் அலி இடம் கொடுத்து இருக்கிறார். இதேபோன்று ஆல்ரவுண்டர் பிராவோ 8வது இடத்திலும் சுழற் பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங்கையும் மொயின் அலி தேர்வு செய்திருக்கிறார்.

இதேபோன்று வேகப்பந்து வீச்சாளராக தீபக்சாகர் மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆகியோரையும் மொயின் அலி தேர்வு செய்து இருக்கிறார். தன்னுடைய பெயரை இந்த பட்டியலில் மொயின் அலி (நல்ல வேலையாக) சேர்க்கவில்லை.
இந்த நிலையில் மொயின் அலியின் இந்த பட்டியலுக்கு சிலர் வரவேற்பும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Moeen ali picks csk all time team - star players missing from the ist

ஆல் டைம் கிரேட் அணி என்றால் அதில் நிச்சயம் தொடக்க வீரராக டுப்ளசிஸ் இடம் பெற வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடியவர் என்பதை மறந்து விடக்கூடாது என்றும் சிலர் கருத்து கூறியிருக்கிறார்கள்.

சிலர் ஹேசல்வுட் சிஎஸ்கே அணிக்காக பெரிய அளவில் விளையாடவில்லை என்றும் அவருக்கு பதிலாக போலிங்கரை சேர்த்திருக்க வேண்டும் என்றும், ஹர்பஜன்சிங் பதிலாக அஸ்வினை சேர்த்திருக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Story first published: Friday, July 21, 2023, 16:57 [IST]
Other articles published on Jul 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+