Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோயின் அலி மற்றும் போர்டரை விடுவித்தது இங்கிலாந்து.... கவுண்டிக்காக விளையாடுகின்றனர்!

பிர்மிங்காம்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து மோயின் அலி மற்றும் ஜேம்ஸ் போர்டர் விடுவிக்கப்பட்டனர். டி-20 பிளாஸ்ட் போட்டிகளில் அவர்கள் விளையாட உள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. முதல் டெஸ்ட் பிர்மிங்காமில் நேற்று துவங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து முதல் நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.

Moeen ali and porter released from england team

முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் மோயின் அலி மற்றும் ஜேம்ஸ் போர்டர் இடம்பெற்றிருந்தனர். விளையாடும் 11 பேரில் அவர்கள் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்தில் டி-20 பிளாஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வோர்சஸ்டர்ஷையர் அணியில் மோயின் அலியும், எசக்ஸ் அணியில் போர்டரும் இடம்பெற்றுள்ளனர்.

டி-20 பிளாஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, அவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Thursday, August 2, 2018, 14:07 [IST]
Other articles published on Aug 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+