சிஎஸ்கே
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி ஐ.பி.எல் 2021 தொடரில் சி.எஸ்.கே அணியில் விளையாட உள்ளார். சமீபத்தில் மொயின் அலி தனது ஜெர்சியில் இருக்கும் மதுபான நிறுவன விளம்பர படத்தை நீக்க சொன்னதாகவும், அதனை சிஎஸ்கே ஏற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் அது போன்று அவர் எந்த கோரிக்கையும் மொயின் அலி வைக்கவில்லை என்று சிஎஸ்கே தெரிவித்தது. இது ஐபிஎல் வட்டாரத்தில் பேசுப்பொருளானது.
புதிய சர்ச்சை
இந்நிலையில் தற்போது மீண்டும் மொயின் அலி குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது. மொயின் அலி குறித்து வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துதான் அதற்கு காரணம். அதில் அவர் மொயின் அலி ஒருவேளை கிரிக்கெட் வீரராக ஆகமால் இருந்திருந்தால் அவர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் என்று பதிவிட்டிருந்தார்.

தஸ்லிமா விளக்கம்
தஸ்லிமாவின் இந்த கருத்து கிரிக்கெட் உலகமே அதிர்ந்தது. அவரின் இந்த கருத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வந்தனர். இதனையடுத்து தனது ட்வீட்டுக்கு விளக்கமளித்த தஸ்லிமா, மொயின் அலி குறித்த எனது ட்வீட் ஒரு கிண்டலான ஒன்றுதான் என்பது என்னை வெறுப்பவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் முஸ்லீம் சமுதாயத்தை மதமயமாக்க முயற்சிக்கிறார்கள். நான் இஸ்லாமிய வெறித்தனத்தை எதிர்க்கிறேன். மனிதகுலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று, பெண்கள் சார்பு இடதுசாரிகள் பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பது என தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை
இந்த சர்ச்சை குறித்து மொயின் அலி இன்னும் வாய்த்திறக்காத நிலையில், அவரின் சார்பில் அவரது சட்டரீதியிலான செயல்களை பார்த்துக்கொள்ளும் Aces Middle East நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அந்த நிறுவனம், தஸ்லிமா நஸ்ரீன் மீது அவதூறு வழக்கு தொடர ஆலோசித்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் தஸ்லிமா மீது வழக்கு பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications