For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முரட்டு ஆஸி.. வீரர்களுக்கு பாவமே பார்க்கக்கூடாது… என்னை ஒசாமா என அழைத்தார்கள்

லண்டன் : இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் மொயீன் அலி, ஆஸ்திரேலியா அணியுடன் தனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவரை அவமானப்படுத்தும் வகையில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் பேசியதையும், பின் அவர் அதை மறுத்ததையும் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படிப்பட்ட இயல்பு கொண்டு இருந்தார்கள் என கூறியுள்ளார் மொயீன் அலி.

ஆஸி. வீரர்கள் பற்றி

ஆஸி. வீரர்கள் பற்றி

மொயீன் அலி தன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒரு பத்திரிக்கையில் எழுதி வருகிறார். அதில் ஆஸ்திரேலிய வீரர்கள் பற்றி இப்படி குறிப்பிட்டுள்ளார். "என் வாழ்க்கையிலேயே நான் விளையாடியதில் எனக்கு பிடிக்காத அணி ஆஸ்திரேலியா தான். ஆஸ்திரேலியா இங்கிலாந்தின் பழைய பகையாளி என்பதற்காக அல்ல. அவர்கள் எந்த அளவு மரியாதை இல்லாமல் முரட்டுத்தனமாக மக்களிடமும், வீரர்களிடமும் நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக" என கூறியுள்ளார்.

பாவமே பார்க்கமாட்டேன்

பாவமே பார்க்கமாட்டேன்

மேலும் கூறுகையில், "நான் இயல்பிலேயே யாருக்காவது தவறு நேர்ந்துவிட்டால் பரிதாபப்படுவேன். ஆனால், அவர்களுக்கு அப்படி பரிதாபப்பட முடியவில்லை. அது கடினமாக இருக்கிறது" என கூறி இருக்கிறார். இது பந்து சேத விவகாரத்தில் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பற்றி மொயீன் அலி கூறியது.

2015இல் நடந்த அந்த சம்பவம்..

2015இல் நடந்த அந்த சம்பவம்..

மொயீன் அலியை மிகவும் மோசமாக ஒரு ஆஸ்திரேலியா வீரர் பேசியுள்ளார். இந்த சம்பவம் 2015 ஆஷஸ் தொடரில் நடந்துள்ளது. அப்போது மொயீன் அலி பெயர் சொல்ல விரும்பாத அந்த வீரர், மொயீன் அலியை பார்த்து, "அதை எடு ஒசாமா" என கூறியுள்ளார். மொயீன் அலி முஸ்லிம் என்பதற்காக, அவரை ஒரு தீவிரவாதியோடு ஒப்பிட்டு இப்படி பேசியுள்ளார் அந்த வீரர்.

நான் சொன்னது வேற..

நான் சொன்னது வேற..

இந்த விவகாரத்தை இங்கிலாந்து பயிற்சியாளரிடம் எடுத்து சென்றுள்ளார் மொயீன் அலி. அவர் ஆஸ்திரேலியா பயிற்சியாளர் லேஹ்மானிடம் இது பற்றி கேட்டுள்ளார். அவர்கள் அந்த ஆஸ்திரலியா வீரரிடம் விசாரித்துள்ளனர். அந்த வீரர், "நான் "அதை எடு பகுதி நேர வீரரே" என்று தான் சொன்னேன்" என அப்படியே உண்மையை மறைத்து பேசியுள்ளார். "எனக்கு "ஒசாமா" என்ற வார்த்தைக்கும் "பகுதி நேர வீரர்" என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் கூடவா தெரியாது என நான் நினைத்துக் கொண்டேன். அந்த தொடர் முழுவதும் கோபத்தோடு தான் இருந்தேன்" என கூறியுள்ளார் மொயீன் அலி

ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களின் முரட்டு குணத்துக்கு தான் இப்போது முக்கிய வீரர்கள் இல்லாமல், மனதளவில் சோர்ந்து இருக்கிறார்கள். இனி அடுத்த தலைமுறை வீரர்களாவது மரியாதையோடு எதிரணியை நடத்த வேண்டும். வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.

Story first published: Saturday, September 15, 2018, 13:13 [IST]
Other articles published on Sep 15, 2018
English summary
Moeen Ali says Australians are rude and one player called him Osama and denied later
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X