WATCH: 60 பந்துகளில் 121 ரன்கள்,11 சிக்ஸ்…! கழற்றிவிட்ட அணி நிர்வாகத்தை மூக்குடைத்த அதிரடி வீரர்
Recommended Video
மும்பை: இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் மொயின் அலியின் அதிரி புதிரியான ஆட்டத்தை பார்த்து அரங்கமே அரண்டு போனது.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் சரியில்லை.. எதுவுமே ஒழுங்காக இல்லை. அதன் காரணமாக, எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெளியில் அமர வைக்கப்பட்டார் இங்கிலாந்தின் மொயின் அலி.
அணி தேர்வாளர்களின் இந்த கடின முடிவு அப்போது பெரும் விவாத பொருளாக மாறியது. ஆனால், கடைசி 2 போட்டிகளுக்கான அணியில் கூட சேர்க்கப்படாத மொயின் அலி, டி20 பிளாஸ்ட் தொடரில் தட்டு தூக்கியிருக்கிறார்.

டி 20 பிளாஸ்ட் தொடர்
இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடரில் சஸெக்ஸ் மற்றும் வோர்செஸ்டெர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சஸெக்ஸ், 20 ஓவர் முடிவில் 184 ரன்களை குவித்தது.
185 ரன்கள் இலக்கு
185 ரன்கள் என்ற கடின இலக்குடன் களம் இறங்கியது வோர்செஸ்டெர்ஷைர். ஜோ லீச் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சிடைய வைத்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான வெசல்ஸுடன் கை கோர்த்தார் மொயின் அலி. களமிறங்கியது முதலே அவரது ஆட்டம் வேறு மாதிரியாக தான் இருந்தது.
ரசிகர்கள் ஆரவாரம்
அதிரடியாக ஆட ஆரம்பித்த மொயின் அலி, பவுண்டரியும் சிக்சருமாக வெளுத்து தள்ளினார். மொயின் அலியின் பேட்டிங்கை கண்டு வர்ணனையாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் ஆரவாரமிட்டனர்.

பவுலர்கள் திணறல்
வெசல்சும் சும்மா இல்லை. அவரும் அதிரடியை கிளப்பினார். ஸ்கோர் ஜெட் வேகத்தில் மேலேறியது. சஸெக்ஸ் அணி பவுலர்களால், மொயின் அலியின் அதிரடியை கட்டுப்படுத்த முடியவில்லை, அவரது விக்கெட்டையும் வீழ்த்த முடிய வில்லை.
சதம், வெற்றி
அபாரமாக ஆடி சதமடித்த மொயின் அலி, 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்களுடன் 121 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. அவரது காட்டடியால் வோர்செஸ்டெர்ஷைர் அபார வெற்றி பெற்றது. 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications