Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு பின்னடைவு.. முதல் டி20க்கான பிட்ச் ரிப்போர்ட்.. டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்??

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்க்கலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.

இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறவிருக்கிறது.

 ஆஸ்திரேலிய டி20 தொடர்

ஆஸ்திரேலிய டி20 தொடர்

ஆசிய கோப்பை தொடரில் சொதப்பிய இந்திய அணி அந்த தவறுகளை சரிசெய்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதே போல டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான கடைசி கட்ட பயிற்சிகள் இதுதான் என்பதால், வெற்றியுடன் தொடங்க வேண்டியதும் அவசியம். இதே காரணத்திற்காக தான் ஆஸ்திரேலிய அணியும் வந்துள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் இந்த முக்கிய போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்-ஐ காணலாம். இந்திய களங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் சூழலில் மொஹாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு உதவும். ஆட்டத்தின் முதல் சில ஓவர்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தான் இருக்கும். அதை எப்படியாவது பயன்படுத்திக்கொண்டு விக்கெட் எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் எதிரணியை கட்டுப்படுத்த முடியாது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஆம், வேகப்பந்துவீச்சாளர்களை போலவே பேட்டிங்கிற்கும் மொஹாலி மைதானம் உதவும். சிறிது நேரம் நிதானமாக நின்று பிட்ச்-ன் தன்மையை உணர்ந்துவிட்டால், பின்னர் சுலபமாக ஷாட்களை அடிக்கலாம். மைதானத்தின் அவுட் ஃபீல்டும் வறண்டு இருக்கும் என்பதால், பந்தை அடித்தவுடனேயே வெகு சீக்கிரமாக பவுண்டரிக்கு சென்றுவிடும். பொதுவாக இந்த மைதானத்தில் அதிக ஸ்கோர் கொண்ட போட்டியாக தான் இருக்கும். சராசரியாக சுமார் 160 -170 ரன்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வரலாம்.

டாஸில் என்ன செய்வது?

டாஸில் என்ன செய்வது?

மொஹாலியில் இரவு பனிப்பொழிவும் முக்கிய பங்காக இருக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை பனிப்பொழிவு ஏற்பட்டால் 2வதாக பவுலிங் செய்யும் அணிக்கு சிக்கலாக அமையும். எனவே டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்யும். இதுவரை இந்த மைதானத்தில் 5 சர்வதேச டி20க்கள் நடந்துள்ளன. அதில் 3 போட்டிகளில் பவுலிங்கை தேர்வு செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

 ஆஸ்திரேலியாவுக்கு பலன்

ஆஸ்திரேலியாவுக்கு பலன்

இதுபோன்று வேகப்பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிற்கு ஏற்ற களங்கள் தான் ஆஸ்திரேலியாவிலும் இருக்கும். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு இந்த களத்தை எதிர்கொள்வது சுலபமாக தான் இருக்கும். இந்திய வீரர்களுக்கு தான் புதுவிதமாக இருக்கும் என்பதால் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, September 20, 2022, 17:52 [IST]
Other articles published on Sep 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+