பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதி ஆட்டம்
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரை இறுதிப் போட்டி இன்று பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

போட்டி நடைபெறும் மொஹாலி கிரிக்கெட் மைதானத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஏவுகணைகள், விமான எதிர்ப்புப் பீரங்கி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை நேரில் கண்டு களித்ததால் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரும் திரளான பாகிஸ்தான் ரசிகர்களும் மைதானத்தில் குழுமி கண்டு களித்தனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ரிமோட் கன்ட்ரோல் கருவி மூலம் செயல்படுத்தக் கூடிய வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பிரிவுகளும் களம் இறக்கப்பட்டிருந்தன.
சந்திமந்திரில் உள்ள வெஸ்டர்ன் கமாண்ட் ராணுவப் பிரிவைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications