'கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள்'.. இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்!
துபாய்: இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளின் ரசிகர்களும் இந்தியாவை புலி போல் பார்த்தனர். ஆனால் இந்திய அணியோ தற்போது பூனை போல் காட்சியளிக்கிறது. நமது அணியின் தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் கூட பாகிஸ்தானிடம் முடிந்த வரைக்கும் போராடி கடைசியில்தான் விட்டுக் கொடுத்தது. ஆனால் சகலபலம் பொருந்திய இந்திய அணி 2 மேட்ச்களிலும் சிறு போராட்ட குணத்தை கூட வெளிப்படுத்தாமல் அப்படியே அடிபணிந்து விட்டது.

அருவருப்பாக உள்ளது
அணியின் மோசமான தோல்வியை எந்த ஒரு இந்தியராலும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு சிலர் கிரிக்கெட் விளையாட்டு. இதில் வெற்றி தோல்வி சகஜம் என்பதை மறந்து வீரர்களின் குடும்பத்தையும், அவர்களின் தனிப்பட்ட மதத்தையும் வைத்து விமர்சித்து வருவது அருவருப்பாக உள்ளது.

முகமது ஷமி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் சொதப்பிய இந்திய பவுலர் முகமது ஷமியின் குடும்பத்தை பற்றியும், மதரீதியாகவும் சிலர் சமூக வலைத்தளத்தில் பேசினார்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த பல வீரர்கள் முகமது ஷமிக்கு ஆதரவாக நின்றனர். இதேபோல் ஷமிக்கு ஆதரவு கொடுத்த கேப்டன் விராட் கோலி, ' 'எந்த நபருடனும் நேரில் பேச தைரியம் இல்லாத முதுகெலும்பு அற்றவர்கள்தான் இப்படி கூறுவார்கள்' நாங்கள் எப்போதும் ஒரு அணியாக ஒன்றுபட்டு நிற்கிறோம்'' என்று கூறினார்.
Recommended Video

தனிப்பட்ட முறையில் விமர்சனம்
இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து உடனும் தோற்ற நிலையில் அணியின் வீரர்கள், குடும்பத்தினர் குறித்து தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். சில வீரர்களின் சமுதாயம் ரீதியாகவும், மத ரீதியாகவும் விமர்சனம் வைத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த செயல்பாட்டுக்கு வீர்ர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டாக மட்டும் பாருங்கள்
இந்த நிலையில் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்று இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், ''இந்தியா ஒரு சிறந்த அணி என்று நான் இன்னும் நம்புகிறேன், அது நல்ல நேரம் அல்லது கெட்ட நேரம் என்பது வேறு விஷயம் ஆனால் வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் துஷ்பிரயோகம் செய்வது மிகவும் அவமானம், கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதை மறந்துவிடாதீர்கள்' என்று கூறியுளளார்.


Click it and Unblock the Notifications