Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்தில் ஆபாசமான கொண்டாட்டம்.. பிஎஸ்எல் தொடரில் முகமது அமீரால் சர்ச்சை.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நட்சத்திர வீரர் முகமது அமீர் செய்துள்ள ஆபாசமான விஷயங்களால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் உள்நாட்டு தொடரான பிஎஸ்எல் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் தொடங்கியது. தற்போது வரை 9 போட்டிகள் மட்டுமே நடந்துள்ள சூழலில் மோசமான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

சர்ச்சைகளுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் தான். அதுவும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமையே அடிக்கும் அளவிற்கு சென்று மோசமான வார்த்தைகளையும் பேசி அதிர்ச்சி தந்தார்.

முகமது அமீரின் ஆவேசம்

முகமது அமீரின் ஆவேசம்

லீக் சுற்றின் 2வது போட்டியில் கராச்சி மற்றும் பெஷாவர் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பெஷாவர் அணி கேப்டன் பாபர் அசாம் 46 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். பாபரை அவுட்டாக்க முடியாத அதிருப்தியில் இருந்த முகமது அமீர், பந்தை பாபர் மீது வீசி எறிந்தார். மேலும் கடும் கோபத்துடன் வார்த்தைகளை உதிர்த்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

புது சர்ச்சை

புது சர்ச்சை

இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற லீக் போட்டியின் போது விக்கெட்டை கைப்பற்றிய முகமது அமீர், வேகமாக ஓடி சென்று ஆபாசமான செய்கையை காட்டினார். பிரபல மல்யுத்த வீரரான ட்ரிபிள் எச் செய்வதை போலவே செய்ததாக சிலர் கூறினாலும், அவர் செயல் ஆபாசமான விஷயத்தை காட்டுகிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சாஹித் அஃப்ரிடி கண்டனம்

சாஹித் அஃப்ரிடி கண்டனம்

அமீரின் இந்த செயல்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், முகமது அமீரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன், வாழ்க்கையில் 2வது வாய்ப்பு கிடைத்துள்ளது, அதனை வீணாக்கிவிட வேண்டாம். இந்த தொடரை பயன்படுத்தி கம்பேக் கொடுக்குமாறு அறிவுரை கூறியதாக தெரிவித்தார். ஆனால் அமீர் அதனை காது கொடுத்து கேட்டதாக தெரியவில்லை.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

அமீரின் இந்த செயல் பூதாகரமாக வெடித்திருப்பதால், நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் என தெரிகிறது. ஒருவேளை அவர் தனது தவறை ஒப்புக்கொண்டால் சில போட்டிகளில் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது.

Story first published: Tuesday, February 21, 2023, 18:46 [IST]
Other articles published on Feb 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+