பாக். கிரிக்கெட் வீரர் முகம்மது ஆசிப் மீது முன்னாள் காதலி மோசடி வழக்கு

ஆசிப்பின் முன்னாள் காதலி வீனா மாலிக். இருவரும் இப்போது பிரிந்து விட்டனர். ஆனால் இருவருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்த மோதல் நேற்று முன்தினம் புதிய திருப்பத்தை சந்தித்தது. தான் ஆசிப்புக்குக் கொடுத்த கடனைத் திருப்பித் தருவதற்காக அவர் கொடுத்த இரண்டு காசோலைகள் திரும்பி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், லாகூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் வீனா மாலிக்.
இதுகுறித்து வீனா கூறுகையில், நான் பலமுறை நினைவூட்டியும், எனக்கு ஆசிப் தர வேண்டிய 1.4 கோடி பணத்தை திரும்பத் தராமல் இருந்து வந்தார் ஆசிப். மேலும் இதுதொடர்பாக அவர் இரண்டு காசோலைகளைக் கொடுத்தார். ஆனால் அது திரும்பி வந்து விட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளேன் என்றார்.
ஆனால் ஆசிப்பும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அதில், எனது காசோலைகளை சிலர் கடந்த பிப்ரவரி மாதம் திருடியுள்ளனர். அது எப்படி திருட்டுப் போனது என்பதை கண்டுபிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வீனாவுக்கு நான் கொடுக்க வேண்டிய கடன் அத்தனையையும் கொடுத்து விட்டேன். இனி எதுவும் தர வேண்டியதில்லை என்றார்.
இருவரது மனுக்களையும் விசாரித்த கோர்ட், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications