Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை திட்டாதீர்கள்.. தோல்விக்கு இவர் மட்டும் காரணம் கிடையாது.. ஆதரவு கொடுக்கும் இந்திய ஜாம்பவான்!

துபாய்: உலக கிரிக்கெட் அரங்கில் சுமார் 70% ரசிகர்களை வைத்திருக்கும் இந்திய அணி இன்று மிக மோசமான நிலையில் பரிதவிக்கிறது. பரம எதிரியான பாகிஸ்தானிடம், நேற்று நியூஸிலாந்திடமும் செம அடி வாங்கி அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டு நிற்கிறது.

டி20 உலககோப்பையை கைப்பற்றும் அணிகளின் இந்தியா முதன்மையானதாக இருக்கும் என்று கணித்த ஆருடம் எல்லாம் இன்று கானல்நீராகி விட்டது. இந்த தொடரில் நமது அணியின் பேட்டிங், பவுலிங் முற்றிலுமாக சொதப்பியதே படுதோல்விக்கு காரணம்.

ரசிகர்கள் கொதிப்பு

ரசிகர்கள் கொதிப்பு

இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அனைத்து வீரர்களும் இதே மைதானத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றவர்கள். பிட்சின் தன்மையை நன்கு அறிந்த போதிலும் அணி பேட்டிங்கில் படுமோசமாக இருந்தது கேள்வியை எழுப்பி உள்ளது. பவுலிங் பேட்டிங்கை விட மோசம். இதுவரை இரண்டு போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளனர் அணியின் பவுலர்கள். மொத்தத்தில் இந்திய அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.

கோலியின் தவறான முடிவு

கோலியின் தவறான முடிவு

அதுவும் பெரும்பாலான ரசிகர்களின் கோபமும் விராட் கோலி மீதுதான் உள்ளது. வழக்கமாக ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோகித் சர்மாவை ஒன்டவுன் இறக்கியது தவறு, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தொடர்ந்து சொதப்பி வரும் ஹார்திக் பாண்ட்யாவுக்கு பிடிவாதமாக வாய்ப்பு கொடுத்தது தவறு, அஸ்வினை விளையாடாமல் ஓரங்கட்டியது தவறு என்று கேப்டன் விராட் கோலியை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். கோலியின் தவறான முடிவே தோல்விக்கு காரணம் என்று கூறுகின்றனர்.

கோலிக்கு ஆதரவு

கோலிக்கு ஆதரவு

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் விராட் கோலியை மட்டும் குறைகூறுவது சரியல்ல என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், '' விராட் கோலி விமர்சனத்தை எதிர்கொள்கிறார், ஆனால் ஒட்டுமொத்த அணியும் பயிற்சியாளர்களும் தான் தோல்வியடைந்துள்ளனர், ஒரு நபர் மட்டுமல்ல.

இது இந்திய ரசிகர்களுக்கு பயமுறுத்தும் ஹாலோவீனாக மாறியது'' என்று அவர் கூறியுள்ளார்.

Recommended Video

IND vs NZ: 5 interesting stat facts | T20 World Cup 2021 | OneIndia Tamil
அனைத்து வீரர்களுமே முழு பொறுப்பு

அனைத்து வீரர்களுமே முழு பொறுப்பு

முகமது அசாருதீன் கூறியபடி அணியின் தோல்விக்கு அணி தேர்வாளர்கள், அணியின் அனைத்து வீரர்களுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த தொடர் நடைபெறுவதற்கு முன்பு அணி தேர்வு கூட்டத்தின்போது விக்கெட் டேக்கிங் பவுலரான யுஸ்வேந்திர சாஹலை அணியில் எடுக்க வேண்டும் என்று விராட் கோலி கூறியபோது தேர்வாளர்கள் அதனை நிராகரித்து குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 1, 2021, 19:45 [IST]
Other articles published on Nov 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+