For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'3 நாள் ஆச்சு..இன்னும் என் தொண்டை சரி ஆகல..' வெற்றிக்கு பிறகு.. முகமது ஹபீஸ் செய்த 'சம்பவம்'

ஷார்ஜா: டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு, அணியின் மற்ற வீரர்களை விட தான் அதிக சத்தமாக கத்தியதாகவும் அதில் ஏற்பட்ட தொண்டை வலி இன்னும் கூட தொடர்வதாகவும் பாக். ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் தற்போது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை க்ரூப் பி பிரிவில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்தியா பாகிஸ்தான் மோதல் என்றாலே அனல் பறக்கும். அதில் இந்த போட்டி மட்டும் விதிவிலக்கு இல்லை.

 இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்களை இழந்து 151 ரன்களை எடுத்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்களின் அட்டகாசமான பவுலிங் இந்திய அணியின் பேட்டிங்கை பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்றே சொல்லலாம். அதன் பின்னர் பேட் செய்த பாகிஸ்தானுக்கு மிகச் சிறப்பான தொடக்க விக்கெட் பார்டன்ஷிப் கிடைத்தது.

 முதல் முறை

முதல் முறை

தொடக்க வீரர்களை அவுட் ஆக்க இந்திய பவுலர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். இருப்பினும், அதில் எதுவும் கடைசி வரை பலன் அளிக்கவில்லை. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில், உலக கோப்பை தொடர் ஒன்றில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 30 ஆண்டுகளில் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 7 முறையும் டி20 போட்டிகளில் 5 முறையும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. இருப்பினும், இந்தியாவின் இந்த சாதனை பயணம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

Recommended Video

Reasons behind Pakistan win against New Zealand | T20 World Cup 2021 | OneIndia Tamil
 பாக் ரசிகர்கள் கொண்டாட்டம்

பாக் ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்கள் அந்நாட்டு அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி தொடர்பாக கேப்டன் பாபர் அசாம் டிரஸிங் ரூமில் பேசும் வீடியோவையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த வெற்றியை பாகிஸ்தான் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறது என்பதையே இது உணர்த்துகிறது. ஒட்டுமொத்த பாகிஸ்தானே தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடியது.

 வைரல் படங்கள்

வைரல் படங்கள்

இந்த ஆட்டம் முடிந்த கையோடு விராட் கோலி முகமது ரிஸ்வான் உடன் இருக்கும் புகைப்படங்களும். எம்எஸ் தோனி சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசனை அளிப்பது போன்ற படங்களும் இணையத்தில் வைரலானது. இதனை பல கிரிக்கெட் முன்னாள் வீரர்களும் வரவேற்றுள்ளனர். போட்டி என்பது களத்திற்கு உள்ளே தானே தவிர வெளியே இல்லை என்பதையே இது காட்டுவதாக அவர்கள் தெரிவி இந்த ஆட்டம் முடிந்த கையோடு விராட் கோலி முகமது ரிஸ்வான் உடன் இருக்கும் புகைப்படங்களும். எம்எஸ் தோனி சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆலோசனை அளிப்பது போன்ற படங்களும் இணையத்தில் வைரலானது. இதனை பல கிரிக்கெட் முன்னாள் வீரர்களும் வரவேற்றுள்ளனர். போட்டி என்பது களத்திற்கு உள்ளே தானே தவிர வெளியே இல்லை என்பதையே இது காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.த்தனர்.

 இன்னும் வலிக்கிறது

இன்னும் வலிக்கிறது

இந்தச் சூழலில் பாகிஸ்தான் தனது 2ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை நேற்று எதிர்கொண்டது. இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது. இந்த போட்டி தொடக்கத்திற்கு முன்னதாக முகமது ஹபீஸிடம், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த 41 வயதான ஹபீஸ், "இந்தியா உடனான போட்டியில் வென்ற பிறகு, மற்ற வீரர்களை காட்டிலும் நான் தான் மிக மிக சத்தமாக கத்தினேன். எனக்கு தொண்டை இன்னும் கூட வலிக்கிறது. இது எங்கள் அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு வெற்றி" என்று தெரிவித்தார்.

 தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

அதேபோல இந்தியாவுக்கு எதிரான வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் உள்ளதாக பாக். கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வெற்றி எப்போதும் தன்னம்பிக்கையை அளிக்கிறது, குறிப்பாக உலக கோப்பை போன்ற தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது எங்களை மிகப் பெரிய அளவில் ஊக்குவிக்கிறது. இதே போன்ற ஆட்டததை வரும் போட்டிகளிலும் வெளிப்படுத்தவே விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.

Story first published: Wednesday, October 27, 2021, 17:14 [IST]
Other articles published on Oct 27, 2021
English summary
Pakistan all rouder Mohammad Hafeez speech about victory over India. India vs Pakistan World cup t20 match latest updates.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+