Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை!

துபாய்: சயீத் அஜ்மலைத் தொடர்ந்து மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

இந்த முறை ஆல் ரவுண்டர் முகம்மது ஹபீஸ் சிக்கியுள்ளார். அவரது பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால் அவரதை் தடை செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் மேலும் ஒரு முக்கிய வீரருக்கு ஐசிசி தடை விதித்திருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

Mohammad Hafeez suspended for illegal bowling action

இதுகுறித்து ஐசிசி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பாகிஸ்தான் வீரர் முகம்மது ஹபீஸ் பந்து வீசும் முறை சட்டவிரோதாக இருக்கிறது. எனவே ஆப் ஸ்பின்னரான அவர் தற்காலிகமாக பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

34 வயதான ஹபீஸுக்கு கடந்த மாதம் லோபோரோ சோதனை மையத்தில் சோதனை நடத்தப்பட்டது. அபுதாபியில் பாகிஸ்தான், நியூசிலாந்து இடையிலான போட்டியின்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் கிளப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த சோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.

லோபோரோ சோதனையில் அவர் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவை விட அதிக அளவில் கையை வளைப்பது தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தத் தடையைப் பொருட்படுத்தாமல் உலக்க கோப்பைக்கான 30 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் ஹபீஸும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சயீத் அஜ்மல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹபீஸும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.

Story first published: Sunday, December 7, 2014, 16:34 [IST]
Other articles published on Dec 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+