நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. மிடில் ஓவரில் மிரட்டல்.. கெத்து காட்டிய முகமது ஷமி.. எகனாமி தான் மாஸ்!
மொஹாலி: 2022ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மிடில் ஓவர்களில் வேற லெவலில் பந்துவீசி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கு மொஹாலி மைதானம் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதே மறைமுக காரணமாக அமைந்தது. இந்தப் போட்டியில் சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டு, நட்சத்திர வீரர் முகமது ஷமி சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து வழக்கம் போல் புதிய பந்தில் மேஜிக் செய்யக் கூடிய முகமது ஷமி, முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷை 4 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து முதல் 10 ஓவர்களுக்குள் முகமது ஷமி 4 ஓவர்களை வீசி அசத்தினார். அந்த 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மற்றும் ஒரு மெய்டன் ஓவரை வீசி அசத்தினார்.
புதிய பந்தில் சிறப்பாக வீசுவது முகமது ஷமிக்கு சாதாரணமான விஷயம் தான். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பிரிவில் ஒற்றை ஆளாக குஜராத் அணியின் பவுலிங்கை தாங்கி பிடித்தவர். புதிய பந்தில் முகமது ஷமி பந்துவீசினால் விக்கெட் இன்றி வெளியில் வர மாட்டார். அந்த அளவிற்கு ஷமியின் புதிய பந்தில் ஸ்விங்கும், சீமும் இருக்கும்.
இதனால் முகமது ஷமியின் மிடில் ஓவர்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. இதையடுத்து 20 ஓவர்களுக்கு பின் 21வது ஓவரை வீச முகமது ஷமி அழைக்கப்பட்டார். அந்த ஓவரிலேயே அபாயகரமான வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை 41 ரன்களில் போல்ட் எடுத்து வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் 20 ஓவர்கள் முதல் 40 ஓவர்களை வரை முகமது ஷமி 4 ஓவர்களை வீசினார். அதில் வெறும் 15 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். மொத்தமாக டெத் ஓவர்களுக்குள்ளாக மட்டுமே 29 டாட் பால்களை வீசி இருக்கிறார். இந்த நிலையில் ஷமி பற்றிய முக்கியமான ஸ்டாடிஸ்டிக்ஸ் வெளியாகியுள்ளது.
அதாவது 2022ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 11 முதல் 40 ஓவர்கள் வரையிலான ஆட்டத்தின் மிடில் ஓவர்கள் பகுதியில் மொத்தமாக 31 ஓவர்களை வீசி இருக்கிறார். அதில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முகமது ஷமியின் எகானமி வெறும் 4.19ஆக உள்ளது. அதேபோல் பவுலிங் சராசரி 11.81ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 16.9ஆகவும் உள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications