Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலியில் துடித்த தென்னாப்பிரிக்க வீரர்.. சண்டைக்கு போன சிராஜ்.. இந்தியா ஏ போட்டியில் நடந்தது என்ன?

பெங்களூர்: இந்தியா 'ஏ' மற்றும் தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் லெசெகோ செனோக்வானேவுடன் மைதானத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டதோடு, இந்தத் தொடரின் முக்கியப் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் முகமது சிராஜ் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். போட்டியின் ஒரு கட்டத்தில், சிராஜின் வேகத்தையும் பவுன்சரையும் தாக்குப்பிடித்து பேட்ஸ்மேன் செனோக்வானே போராடி வந்தார்.

Mohammad Siraj Engages in Heated Argument with South African Batter Lesego Senokwane on Field

அப்போது, சிராஜ் வீசிய அதிவேகப் பந்து ஒன்று எதிர்பாராதவிதமாக செனோக்வானேவின் உடலில் பலமாகத் தாக்கியது. வலியால் துடித்த அவர், மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். செனோக்வானே வலியிலிருந்து மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தபோது, ஆக்ரோஷத்திற்குப் பெயர் போன சிராஜ், அவரிடம் சென்று சில கடுமையான வார்த்தைகளைக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஏற்கனவே பரபரப்பாக இருந்த ஆட்டத்தில் மேலும் அனல் பறந்தது. இந்த வாக்குவாதத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

மோதலுக்குப் பின்...

இருப்பினும், இந்த மோதல் பெரிதாகாமல் உடனடியாக முடிவுக்கு வந்தது. வலியிலிருந்து மீண்ட செனோக்வானே, தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார். மறுபுறம், முகமது சிராஜ் தனது ஆக்ரோஷமான பந்துவீச்சைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணியின் தடுப்பாட்டத்தை உடைக்க கடுமையாகப் போராடினார். பின்னர் இந்தப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 417 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்கா ஏ அணி எட்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், முகமது சிராஜின் அபாரமான பந்துவீச்சால்தான் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வெற்றிக்கு அருகே இருந்த நிலையில், கடைசி விக்கெட்டை வீழ்த்தி தொடரை 2-2 என சமன் செய்ய சிராஜின் ஆக்ரோஷமான பந்துவீச்சே முக்கியக் காரணமாக அமைந்தது. அவரது இந்த ஆக்ரோஷம்தான் களத்தில் அவரது மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், அது எதிரணி வீரர்களிடம் எல்லை மீறாமலும் இருக்க வேண்டும்.

Story first published: Monday, November 10, 2025, 8:04 [IST]
Other articles published on Nov 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+