Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்சி.. ரஞ்சி டிராபியில் இன்னொரு முகத்தை காட்டிய முகமது சிராஜ்.. டாப்பில் ஐதராபாத் அணி!

ஐதராபாத்: ரஞ்சி டிராபி தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்கிய முகமது சிராஜ், ஆந்திரா மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிராக வென்று காட்டி இருக்கிறார். இதன் மூலமாக எலைட் குரூப் பி பிரிவில் ஐதராபாத் அணி முதலிடத்தை பிடித்திருக்கிறது. கேப்டன்சியில் முகமது சிராஜ் அசத்தி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தன்னுடைய பிரைம் ஃபார்மில் இருந்து வருகிறார். ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முகமது சிராஜ், அடுத்ததாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறார். இதனால் சிராஜ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Mohammad Siraj

இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் சிராஜ் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறந்த கேப்டனாக இருக்க முடியும். ஆனால் நட்சத்திர அந்தஸ்து காரணமாக பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்படும். ரஞ்சி டிராபி தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக முகமது சிராஜ் களமிறங்கினார்.

திரிபுரா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஐதராபாத் அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் முகமது சிராஜின் கேப்டன்சியும் அசத்தலாக அமைந்துள்ளது.

ஏனென்றால் கேப்டன் என்பதால் அதிக ஓவர்களை சிராஜ் எடுத்து கொள்ளவில்லை. அதற்கு மாறாக மற்ற பவுலர்களுக்கு அதிக ஓவர்களை வீச வாய்ப்பு கொடுத்து பின் இருந்து இயக்கினார். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு எதிரான ஃபீல்ட் செட் அமைப்பதிலும் சிராஜின் செயல்பாடுகள் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இதன் மூலமாக இந்திய அணியின் துணைக் கேப்டன் அந்தஸ்துக்கு முகமது சிராஜ் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பும்ரா இந்திய அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். ஆனால் ஃபிட்னஸ் மற்றும் காயம் காரணமாக பும்ராவால் முழு நேர கேப்டனாக செயல்பட முடியவில்லை. ஆனால் சிராஜ் பெரும்பாலும் காயத்தால் எந்த போட்டியையும் மிஸ் செய்ததே கிடையாது. இதனால் சிராஜ்க்கு அந்த வாய்ப்பை பிசிசிஐ வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, October 21, 2026, 22:58 [IST]
Other articles published on Oct 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+