Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரதர் கோலி.. இது என்ன கோலம்? பாக். வீரர் பகிர்ந்த போட்டோ.. லந்து செய்த ரசிகர்கள்.. செம வைரல்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் போலவே தோற்றம் அளிக்கும் ஒரு நடிகரின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர்.

Recommended Video

Mohammed Amir shared Kohli look alike in Twitter.

அந்த புகைப்படத்தை கண்ட பல ரசிகர்கள் "அட ஆமாம்.. கோலி மாதிரி தான் இருக்கு" என கூறி உள்ளனர்.

சில குறும்புக்கார ரசிகர்கள் லோ கிளாஸ் கோலி, மிடில் கிளாஸ் கோலி என வகுப்பு வாரியாக கோலி போல இருப்பவர்களின் புகைப்படத்தை பகிர்ந்து லந்து செய்துள்ளனர்.

ஆமிர் என்ன செய்கிறார்?

ஆமிர் என்ன செய்கிறார்?

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். பலரும் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது வீரர் ஆமிர் ஒரு துருக்கிய நாடகத்தை பார்த்து வருகிறார் போல.

துருக்கிய நாடகம்

துருக்கிய நாடகம்

ஓட்டோமான் பேரரசை நிறுவிய ஒஸ்மான்-இன் தந்தை எர்துக்ருல் காஸியின் வரலாறு துருக்கியில் நாடகமாக எடுக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பானது. அந்த தொடரை பார்த்து வந்த முகமது ஆமிர், அதில் வந்த நடிகர் ஒருவர் ஒரு காட்சியில் விராட் கோலி போலவே இருந்ததை கண்டுள்ளார்.

பிரதர்.. இது நீங்களா

பிரதர்.. இது நீங்களா

அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். "கோலி பிரதர்.. இது நீங்களா.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு" என கேள்வியும் கேட்டு சிரித்துள்ளார் முகமது ஆமிர். அந்த பதிவு ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.

நான்கு கோலி

நான்கு கோலி

சில ரசிகர்கள் அதை ஆமோதித்து ஆமாம், இது கோலி போல தான் இருக்கிறது என கூறி உள்ளனர். சிலர் கோலி போலவே தோற்றம் அளிக்கும் பலரின் புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்துள்ளனர். ஒருவர் நான்கு கோலிக்களின் படத்தை பகிர்ந்துள்ளார்.

Story first published: Saturday, May 16, 2020, 20:46 [IST]
Other articles published on May 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+