டி20 உலககோப்பைக்கான இந்திய அணி.. 2 வீரர்களின் நீக்கம் ஆச்சரியம் அளிக்கிறது.. அசாரூதீன் கருத்து
ஐதராபாத்: ஐசிசி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் இடம்பெறாதது குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு குழு நேற்று அறிவித்தது .
மேலும் முகமது ஷமி, ரவி பிஸ்னாய் உள்ளிட்ட 4 வீரர்களின் பெயரை ரிசர்வ் அணியாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆச்சரியம்
இந்திய அணி அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டாலும் சிலர் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதீன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு பார்த்து எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக கூறியுள்ளார்.

யாருக்கு பதில்?
ஸ்ரேயாஸ் ஐயர் , முகமது ஷமியை ஏன் தேர்வு செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். தீபக் ஹூடா, ஹர்சல் பட்டேலுக்கு பதில் முகமது ஷமியையும் தாம் தேர்வு செய்து இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, ஸ்ரேயாஸ் திறமையான வீரராக அறியப்பட்டாலும், கடந்த சில போட்டிகளாக அவர் சொதப்பினார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் மட்டுமே அவர் தனது பழைய ஆட்டத்தை காட்டினார்.

ஸ்ரேயாஸ் சிக்கல்
ஸ்ரேயாஸ்க்கு ஷார்ட் பால் சிக்கல் இருக்கிறது. அவர் பேட்டிங்கிற்கு வந்தாலே ஷார்ட் பாலை போட்டு எதிரணி வீரர்கள் அவருடைய விக்கெட்டை எளிதில் வீழ்த்துகின்றனர். ஆஸ்திரேலியா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக உள்ளது.இதனால் ஸ்ரேயாஸ் குறைகளை பயன்படுத்தி எதிரணி விக்கெட்டை வீழ்த்திடுவார்கள் என்பதால் அவருடைய பெயர் பரிசளிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முகமது ஷமிக்கு வாய்ப்பு
அதே சமயம் முகமது சமி கடந்த ஒரு ஆண்டாக எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை.இதனால் அவரை ரிசர்வ் அணியில் வைத்திருப்பதாகவும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மெயின் அணிக்கு அவர் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அசாருதீன் இந்த கருத்தை ரசிகர்கள் மேற்கோள் காட்டி தங்களின் அபிமான நட்சத்திரத்தை ஏன் தேர்வு செய்யவில்லை என்று சமூக வாழ்க்கை கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications