Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் சொல்றபடி செய்யுங்க.. தொந்தரவு செய்ய மாட்டாங்க..! தோனிக்கு கோரிக்கை வைத்த முன்னாள் கேப்டன்

மும்பை: நான் சொல்லும்படி விளையாண்டால் உங்களை யாரும் ஓய்வு பெற சொல்லி வற்புறுத்த மாட்டார்கள் என்று முன்னாள் கேப்டன் அசாரூதின் கூறி இருக்கிறார்.

உலக கோப்பை முடிந்து, இந்திய அணியின் அடுத்த தொடருக்கான வீரர்கள் அறிவிப்பும் வெளியாகி விட்டது. ஆனால், தோனி தொடர்பான பேச்சுக்கள் மட்டும் குறையவில்லை.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் கேப்டன் அசாருதீனிடம், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு அவர் பதிலளித்தார்.

தோனி பேச வேண்டும்

தோனி பேச வேண்டும்

அவர் கூறியிருப்பதாவது: ஒரு வீரர் தொடர்ந்து விளையாட விரும்பினால், தேர்வு குழுவினர் தொடர்ந்து அவரிடம் பேச வேண்டும். எத்தனை காலம் விளையாட விரும்புகிறீர்கள்? எப்படி விளையாடுவீர்கள்? ஆட்டத்தில் உங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் போன்ற கேள்விகளை அவர்கள் முன்வைக்கவேண்டும்.

முடிவு வரும்

முடிவு வரும்

சிறந்த வீரர் என்றால், அவர்களும் தங்கள் கருத்தினை தன்னம்பிக்கையுடன் கூற வேண்டும். ஏதேனும் ஒரு முடிவு வெளியாகும். இல்லை என்றால், தோனி ஓய்வு எடுப்பார், எடுக்கமாட்டார் என்று பலரும் பேசத்தான் செய்வார்கள்.

பதில் இல்லை

பதில் இல்லை

ஓய்வு பற்றி தோனியிடம் இருந்து எந்த பதிலும், இன்னும் வரவில்லை. நூறு சதவிகிதம் உடல் தகுதி, பேட்டிங் திறமை மாறாமல் அப்படியே இருந்தால், அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில நேரங்களில் அதிகமாக விளையாடிவிட்டால் ஆர்வம் குறையும். அப்படி இல்லை என்றால் விளையாடலாம்.

தோனிக்கு கோரிக்கை

தோனிக்கு கோரிக்கை

ஆனால், நான் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே தோனிக்கு விடுக்கிறேன். நீங்கள் விளையாடும் போதெல்லாம், அதே ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டும். வயதானால் சில சமயங்களில் ஆட்டம் மந்தமாக இருக்கும். ஆனால், உங்கள் ஆட்டம் அப்படி மந்தமாகிவிட்டதாக தெரியவில்லை.

முடிவை அறிவிப்பார்

முடிவை அறிவிப்பார்

உங்கள் இயல்பான ஆட்டத்தால் நிறைய போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. அப்படியே விளையாடினால் அணிக்கு சிறப்பாக அமையும். தோனி, 2 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு, அதற்குப் பின்னர் அவர் தனது முடிவினை அறிவிப்பார். எப்பொழுது எடுத்தாலும் அவர் தெளிவான முடிவெடுப்பார் என நினைக்கிறேன் என்றார்.

Story first published: Tuesday, July 23, 2019, 13:08 [IST]
Other articles published on Jul 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+