Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய நிக்கோலஸ் பூரான்.. லக்னோ அணி என்ன செய்யனும்.. முகமது கையிப் கருத்து

மும்பை : ஐபிஎல் 2023 ஆம் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி எந்த அளவிற்கு சிறப்பாக செயல்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஏனென்றால் முதல் தொடரிலேயே புதிய அணியாக களமிறங்கிய குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், லக்னோ அணி 18 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.

கடந்த சீசனில் கே எல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் சிறப்பான ஃபார்மில் இருந்தார்கள். இதனால் ஆரஞ்சு நிற தொப்பிக்கான போட்டியில் இருவரும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்தார்கள்.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

கே எல் ராகுல் 616 ரன்கள், 508 ரன்களும் அடித்து இருந்தார்கள். இதன் மூலம் லக்னோ அணி பிளே ஆப் சுற்று வரை வர முடிந்தது. எனினும் குவாலிபையர் போட்டியில் அவர்கள் பெங்களூர் அணி இடம் தோல்வியை தழுவினார்கள். இந்த நிலையில் மினி ஏலத்தில் லக்னோ அணி சிறப்பான வீரர்களை வாங்கி குவித்து இருக்கிறது. உதாரணத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை 16 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கி இருக்கிறது.

முகமது கையிப் கருத்து

முகமது கையிப் கருத்து

இந்த நிலையில் லக்னோ அணி குறித்து பேசிய இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப், நிக்கோலஸ் பூராணை லக்னோ அணி அழுத்தம் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கம்பீரும், கே.எல் ராகுலும் நிக்ரோஸ் பூரானுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது போன்ற வீரர்களை நீங்கள் அழுத்தினீர்கள் என்றால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.

அப்படி நினைக்காதீங்க

அப்படி நினைக்காதீங்க

16 கோடி ரூபாய் கொடுத்து விட்டோம் என்பதற்காக அனைத்து போட்டியிலும் நிக்கோலஸ் பூரான் வென்று கொடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க கூடாது.பூரான் மீது சரியான எதிர்பார்ப்பை மட்டும்தான் நீங்கள் வைத்திருக்க வேண்டும். நிக்கோலஸ் பூரான் விளையாடும் 14 ,15 போட்டிகளில் அவர் உங்களுக்காக நான்கு ஐந்து போட்டிகளில் வென்று கொடுத்தாலே போதுமானது. பூரான் போன்ற சிறந்த வீரர்கள் ஆட்டம் இழக்கும் போது அவர் சரியாக விளையாடவில்லை என்று நாம் நினைக்கிறோம்.

வழிகாட்டுதல் தேவை

வழிகாட்டுதல் தேவை

ஆனால் அதிரடியாக விளையாடக்கூடிய பூரானுக்கு வழிகாட்டுதல் தேவை.ஆதரவு தேவை. அவர் தோள் மீது கை போட்டு அவரை ஊக்குவியுங்கள். பூரானை இயல்பான ஆட்டத்தை விளையாட வையுங்கள் என்று முகமது கைஃப் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 47 ஐபிஎல் போட்டிகள் விளையாடிய பூரான் மொத்தமாகவே 912 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

யாரை வாங்கி இருக்கிறார்கள்?

யாரை வாங்கி இருக்கிறார்கள்?

இதில் வெறும் நான்கு அரை சதம் மட்டுமே அடங்கும். பூரானை 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய லக்னோ அணி டானியல் சாம்சை 75 லட்சம் ரூபாய்க்கும், அமீத் மிஸ்ராவை 50 லட்சம் ரூபாய்க்கும், ரோமியோ ஸ்பெர்ட்டை 50 லட்சம் ரூபாய்க்கும், நவீன் உல் ஹக்கை 50 லட்சம் ரூபாய்க்கும், உனாட்கட்டையும் 50 லட்சம் ரூபாய்க்கும், யாஷ் தாக்கூரை 45 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியிருக்கிறார்கள்.

Story first published: Saturday, March 25, 2023, 13:15 [IST]
Other articles published on Mar 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+