
முகமது கைஃப்
இந்திய அணியில் முகமது கைஃப் 2001இல் இளம் வீரராக ஆடத் துவங்கினார். யுவராஜ் சிங், முகமது கைஃப் இணைந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பீல்டிங்கை கவனித்துக் கொண்டனர். இடையே கைஃப் சிறிது,சிறிதாக தன் பார்மை இழந்தார்.

தோனி வருகை
அந்த சமயத்தில் தான் தோனி இந்திய அணியில் இடம் பெற்றார். 2004இல் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஆடத் துவங்கினார் தோனி. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணியில் நீண்ட காலமாக இருந்த இடைவெளியை நிரப்பினார்.

ரன் அவுட் செய்த கைஃப்
இதில் வேடிக்கையான விஷயம் ஒன்றும் உள்ளது. தோனி முதன் முதலில் சர்வதேச போட்டியில் பேட்டிங் ஆடிய போது முகமது கைஃப் செய்த தவறால் ரன் அவுட் ஆனார். அதனால், முதல் போட்டியிலேயே தன் முத்திரையை பதிக்கும் வாய்ப்பை இழந்தார் தோனி.

விருந்து வைத்த கைஃப்
இந்த நிலையில், 2௦௦6இல் முகமது கைஃப் அப்போதைய இந்திய அணிக்கு தன் வீட்டில் விருந்து வைத்தார். அப்போது அணியில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் பலர் இருந்தனர். கிரேக் சேப்பல் அப்போது பயிற்சியாளராக இருந்தார்.

தோனியை கண்டு கொள்ளவில்லை
அப்போது மூத்த வீரர்கள் அனைவரும் ஒரு அறையில் இருந்ததாகவும், இளம் வீரர்கள் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் மற்றொரு அறையிலும் அமர்ந்து இருந்ததாகவும், அப்போது தோனி உள்ளிட்ட இளம் வீரர்களை தான் சரியாக கவனிக்கவில்லை எனவும் கூறினார்.

பதற்றம்
அப்போது தான் மூத்த வீரர்கள் கங்குலி, சச்சினை கவனிப்பது குறித்து பதற்றத்தில் இருந்ததாகவும், அதனாலேயே தோனியை தான் சரியாக கவனிக்கவில்லை எனவும் கூறினார் கைஃப். பிரியாணி பிரியரான தோனிக்கு சரியாக பிரியாணி பரிமாறவில்லை என்ற குறை ஏற்பட்டது.

வாய்ப்பு கிடைக்கவில்லை
வீட்டிற்கு வந்த தன்னை, தான் சரியாக கவனிக்கவில்லை என்ற குறை தோனிக்கு இருந்ததாகவும், அனேகமாக அதனாலேயே தான் அணிக்கு மீண்டும் திரும்ப முடியாமல் போனது எனவும் முகமது கைஃப் சிரித்துக் கொண்டே அந்த பேட்டியில் கூறினார்.

நினைவில் வைத்திருந்த தோனி
இந்த சம்பவத்தை தோனி மறக்கவில்லை என்பதையும் முகமது கைஃப் கூறினார். தோனி எப்போதும் தன்னிடம், "நான் உங்கள் வீட்டிற்கு வந்தேன். என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை" எனக் கூறுவார் என்றார் முகமது கைஃப்.

அதுதான் காரணம்
பார்ம் அவுட் காரணமாக 2006க்கு பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் முகமது கைஃப் 2018இல் ஓய்வை அறிவித்தார். 2019 ஐபிஎல் தொடர் முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் இருக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











