Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரியாணி, சிக்கனா சாப்பிடுவாரு.. அப்புறம் எப்படி இது? தோனியை பார்த்து ஷாக்கான முன்னாள் வீரர்!

மும்பை : தோனி மின்னல் வேகத்தில் ரன் ஓடும் வேகத்தை பார்த்து தான் முதலில் அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் வீரர் முகமது கைஃப் ஒரு பேட்டியில் கூறினார்.

Recommended Video

Kaif shocked seeing Dhoni running fast between wickets

தோனி அணியில் சேர்ந்த போது முகமது கைஃப் இந்திய அணியில் ஆடி வந்தார். அப்போது தோனி மற்ற வீரர்களிடம் இருந்து வேறுபட்டு இருந்தார்.

மற்ற வீரர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்த போது தோனி விரும்பியதை உண்டு அதே உடலமைப்பில் இருந்தார்.

கைஃப் அதிர்ச்சி

கைஃப் அதிர்ச்சி

மேலும், அவர் ரன் ஓடும் வேகத்தை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், ஜிம்குக்கு போகாமல், பட்டர் சிக்கன் மற்றும் பிரியாணி எல்லாம் மனம் விரும்பிய போதெல்லாம் சாப்பிட்டு விட்டு எப்படி இந்த மனிதர் இந்த வேகத்தில் ஓடுகிறார் என தன் வியந்ததாகவும் கூறி உள்ளார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

தோனி 2004இல் இந்திய அணியில் ஆடி வந்தார். அப்போது அணியில் சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லை என்பதால் உள்ளூர் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடியதன் அடிப்படையில் தோனி அணியில் சேர்க்கப்பட்டார்.

அந்த ரன் அவுட்

அந்த ரன் அவுட்

அவரது முதல் ஆட்டத்தில் முகமது கைஃப் உடன் ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் ரன் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோனி வரும் வரை இந்திய அணியில் வேகமாக ரன் ஓடுபவராக இருந்தார் முகமது கைஃப். அவரையே வியக்க வைத்தார் தோனி.

நம்ப முடியாத வீரியம்

நம்ப முடியாத வீரியம்

தான் தோனியுடன் களத்தில் ரன் எடுக்க ஓடும் போது தோனி ரன் ஓடும் வேகம் மற்றும் அதன் வீரியம் நம்ப முடியாததாக இருந்தது என்றும், அவர் அதை தொடர்ந்து செய்தார் என்றும் கூறி தன் வியப்பை வெளிக்காட்டினார் முகமது கைஃப்.

உலகிலேயே அதிக வேகம்

உலகிலேயே அதிக வேகம்

இந்த உலகில் இரண்டு விக்கெட்கள் இடையே ரன் ஓடுவதில் தோனி தான் வேகமானவர் என கருதுகிறேன். அவர் எப்படி இத்தனை போட்டி மிகுந்த வீரராக இருக்கிறார் என பார்த்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என தோனி மீதான தன் எண்ணத்தை கூறினார் கைஃப்.

பிரியாணி சாப்பிடுவார்

பிரியாணி சாப்பிடுவார்

அவர் ஜிம்முக்கு போக மாட்டார். தனக்கு பிடித்த பட்டர் சிக்கன், பிரியாணி ஆகியவற்றை மனம் போன போக்கில் சாப்பிடுவார். ஆனாலும், தோனி மின்னல் வேகத்தில் ரன் ஓடியதாக என தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் கைஃப்.

கோலி சொன்ன விஷயம்

கோலி சொன்ன விஷயம்

தோனி இன்றும் இந்திய அணியில் மிக வேகமாக ஓடும் வீரராக கருதப்படுகிறார். இந்திய அணியில் நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் விராட் கோலி கூட தோனி தன்னை சில போட்டிகளில் வேகமாக ரன் ஓட வைத்து திணற வைத்துள்ளார் என கூறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிடித்த கேப்டன்

பிடித்த கேப்டன்

முகமது கைஃப் தோனியின் ரன் ஓடும் வேகத்தை கண்டு வியந்தாலும், தனக்கு பிடித்த கேப்டன் என சௌரவ் கங்குலியையே தேர்வு செய்துள்ளார். கங்குலி கைஃப்பை இந்திய அணியில் தேர்வு செய்ததில் பெரும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 11, 2020, 20:30 [IST]
Other articles published on May 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+