இந்தியாவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது..ஏன் இந்த அவசரம்? டிராவிட்டை மறைமுகமாக தாக்கிய முகமது கையிப்
மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக புஜாரா நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட வங்கதேச தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்காத நிலையில் துணை கேப்டன் கே எல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து துணை கேப்டன் பொறுப்புக்கு புஜாரா நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஏன் அவசரம்?
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது கைஃப், அணி நிர்வாகத்தின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் கடந்த முறை இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது ரிஷப் பண்ட் தான் துணை கேப்டனாக இருந்தார். இங்கிலாந்து தொடரிலும் புஜரா அணிக்காக விளையாடினார்.
அப்போது ஏன் அவரை துணை கேப்டன் ஆக நியமிக்கவில்லை. அப்படி என்றால் நீங்கள் இப்போது நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். இல்லையென்றால் அப்போது நீங்கள் செய்தது தவறு. யார் இந்த தவறை செய்தது? ஏன் இப்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார்கள்.

தவறான முடிவு
அப்போது ஏன் அவசரமாக கேப்டனாக நியமித்தீர்கள். இளம் வீரராக ரிஷப் பண்ட் இப்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பார்க்கிறார்.
அப்படி இருக்கும் நபரை இவ்வளவு சீக்கிரம் யாரும் கேப்டன் ஆகவோ, துணை கேப்டன் ஆகவோ நியமிக்க மாட்டார்கள். பிறகு ஏன் இந்த முடிவு எடுத்தீர்கள். எனக்கு சுத்தமாக புரியவில்லை. ஏன் இந்திய அணியில் ஒருவர் கேப்டனாக இல்லாமல் தொடர்ந்து அணியின் வெற்றிக்காக செயல்பட முடியாதா?

பெரிய சவால்
அணிக்கு நீங்கள் வெற்றியை தேடி தர வேண்டுமே தவிர கேப்டன் ஆக முயற்சி செய்யக் கூடாது. நம் வீரர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம், அது தவறு. வங்கதேச மண்ணில் இந்திய வீரர்களால் 20 விக்கெட்டை எடுப்பது அவ்வளவு சுலபம் ஆன காரியமாக இருக்காது. ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.இதுவே ஒரு பெரிய சவாலாக தான் இருக்கும்.
நமது வீரர்கள் அடிக்கடி காயம் அடைந்து வருகிறார்கள். இதனால் முக்கியமான தொடர்களில் கூட நாம் முழு பலத்துடன் அணியை தேர்வு செய்து களமிறக்க முடியவில்லை. சுழற் பந்துவீச்சாளர்கள் மூன்றாம் நாட்களுக்கு பிறகு தான் ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்த முடியும். நமது வீரர்கள் அடிக்கடி காயம் அடைந்து வருகிறார்கள். இதனால் முக்கியமான தொடர்களில் கூட நாம் முழு பலத்துடன் அணியை தேர்வு செய்து களமிறக்க முடியவில்லை. சுழற் பந்துவீச்சாளர்கள் மூன்றாம் நாட்களுக்கு பிறகு தான் ஆட்டத்தில் ஆதிக்கத்தை

பொறுத்திருந்து பார்ப்போம்
இதனால் வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் மூன்று நாட்களில் பெரிய பங்காற்ற வேண்டும். ஆனால் இப்போது அணியில் இருக்கும் வேக பந்துவீச்சாளர்கள் அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள். சிராஜும் ,உமேஷ் யாதவும் நம்முடைய முக்கிய பந்துவீச்சாளர்கள் கிடையாது. நமது முக்கிய பந்துவீச்சாளர்கள் முதல் ஓவர்களை வீசி முடித்து விட்ட பிறகு அடுத்த ஓவர்களை வீசதான் இவர்கள் வருவார்கள். தற்போது இந்த இருவரும் முக்கிய வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications