கடைசி நேரத்தில் ஷமி தந்த ஷாக்.. எதிர்பார்க்காத உச்சத்தில் இந்திய அணி.. விழிப்பிதுங்கும் ஆஸி வீரர்கள்
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் காட்டிய சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம் ஆட்டத்தின் முடிவு தலைகீழாகியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களை மட்டுமே அடித்த சூழலில் இந்தியா அதிர்ச்சி வைத்தியம் தந்தது.
கேப்டன் ரோகித் சர்மாவின் அட்டகாசமான சதம் (120) மற்றும் ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் ஆகியோரின் அரைசதங்கள் காரணமாக 2வது நாளின் முடிவில் 221 ரன்களுக்கு 7 விக்கெட்களுடன் முடித்திருந்தது.

3வது நாள் ஆட்டம்
இந்நிலையில் மிகவும் வலுவான நிலையுடன் 3வது நாளை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சிறப்பாக ஆடி வந்த ரவீந்திர ஜடேஜா டாட் மர்ஃபியின் சுழலில் சிக்கி 70 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. அப்போது 328 ரன்களுடன் இந்திய அணி 151 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

டெயில் எண்டர்கள்
இதனால் இந்திய அணியின் கதை அடுத்த 20 ரன்களுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என நினைத்த போது நான் இருக்கிறேன் எனக்கூறிக்கொண்டு ஷமி அட்டகாசம் செய்தார். டெயில் எண்டருக்கு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வராமல் ஸ்பின்னர்களை பந்துவீச வைத்து கம்மின்ஸ் தவறு செய்தார். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட முகமது ஷமி 47 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 84 ரன்களை விளாசினார்.

அக்ஷரின் உதவி
ஷமிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அக்ஷர் பட்டேலும் நிதானமாக ஸ்ட்ரைக்கை ரோட்டேட் செய்துக்கொடுத்தார். இதனால் 9வது விக்கெட்டிற்கு மட்டும் 52 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் பின்னர் தனி ஆளாக போராடிய அக்ஷர் பட்டேல் 174 பந்துகளில் 84 ரன்களை குவித்து அவுட்டானார். இறுதியில் 400 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸை முடித்தது. இதன் மூலம் 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

வெற்றி வாய்ப்பு?
நாக்பூர் பிட்ச்-ஐ பொறுத்தவரையில் 2வது நாளில் இருந்ததை போன்றே தான் 3வது நாளிலும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் நிதானமாக செட்டிலாகி நின்றால் பெரிய ஸ்கோர் அடிக்கவும் முடியும். 4வது, 5வது நாட்களில் பேட்டிங் செய்வது கடினமாக மாறிவிடும். எனவே இன்றைய நாளை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி எப்படியாவது சிறப்பாக ரன்குவித்துவிட வேண்டும். ஆனால் முதல் இன்னிங்ஸில் உள்ள 200 ரன்களை அடிக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications