For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரு தான்… அவரலா தான் நாங்க கடைசியில தோத்தோம்.. யாரை கை காட்டுகிறார் ஆப்கன் கேப்டன்..?

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

சவுதாம்ப்டன்: கடைசி ஒவரில் முகமது ஷமி எங்களது வெற்றியை எங்களிடமிருந்து பறித்துவிட்டார் என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நயிப் கூறியிருக்கிறார்.

சவுதாம்ப்டன் நகரில் உலக கோப்பை லீ்க் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 213 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

வலிமை குறைந்த அணியாக ஆப்கன் இருந்தாலும், நேற்றைய ஆட்டத்தில இந்தியாவை உண்டு, இல்லை என்று செய்துவிட்டது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இந்தியாவை தண்ணி குடிக்க வைத்தனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.

224 ரன்கள்

224 ரன்கள்

இந்தியா அதிரடியாக பெரும் ஸ்கோரை அடித்து தள்ளும் என்று கணக்கிட்ட போது, 224 ரன்களில் சுருட்டியது ஆப்கானிஸ்தான். அதேபோல ஆப்கானிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தபோது, முகமது நபி தூண்போல் இருந்து கடைசி ஓவர் ஆட்டத்தை இழுத்துவந்தார்.

ஆப்கன் தோல்வி

ஆப்கன் தோல்வி

இந்தியா வெற்றி பெற்றாலும், எளிதாக வெற்றி வாய்ப்பை ஆப்கானிஸ்தானிடம் இருந்து பெறவில்லை. 6 போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நயிப் கூறியதாவது:

ரொம்ப வேதனை

ரொம்ப வேதனை

வலிமை வாய்ந்த இந்தியாவை ஜெயிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டோம். ரொம்ப வேதனையாக இருக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியில் இதுபோன்று விளையாடியது எங்களுக்கு மிகப்பெரிய சாதனைதான்.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

ஆனால், இந்தியா போன்ற பெரிய அணிகள் வெற்றியை அவ்வளவு எளிதாக மற்ற அணிகளிடம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஒருவேளை இந்தியாவை வீழ்த்தி இருந்தால், அது உண்மையில் மிகப்பெரிய வெற்றியாக இருந்திருக்கும்.

திட்டப்படி விளையாடினோம்

திட்டப்படி விளையாடினோம்

முகமது நபி, ஆப்கானிஸ்தானிலும், உலக அளவிலும் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். உண்மையில், கடைசி ஓவர்கள் வரை போட்டியை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். நாங்கள் போட்ட திட்டப்படிதான் முகமது நபி களத்தில் விளையாடினார்.

முடியாமல் போனது

முடியாமல் போனது

எனக்கு ஒரே வருத்தம். அது என்னவென்றால், இந்தியாவை மிகக்குறைவான ஸ்கோரில் சுருட்டியும் கூட, சேஸ் செய்ய முடியாமல் போய்விட்டது. இது எங்களுக்கு இந்தபோட்டித்தொடரில் மிகப்பெரிய வருத்தமாக இருக்கும்

50 ரன்கள்

50 ரன்கள்

250 ரன்கள் வரை இந்திய அணி அடித்திருந்தாலும், நடுவரிசையில் எங்கள் வீரர்கள் சிலர் 50 முதல் 80 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் நிச்சயம் இந்தியாவின் ஸ்கோரை சேஸிங்கில் வீழ்த்தி இருப்போம்.

பறித்தார் ஷமி

பறித்தார் ஷமி

இந்தியாவின் ஸ்கோர் சேசிங் செய்யக்கூடியதுதான். கடைசி ஒவரில் முகமது ஷமி எங்களது வெற்றியை பறித்துவிட்டார். ஆனால், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு எங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என்றார்.

Story first published: Sunday, June 23, 2019, 18:27 [IST]
Other articles published on Jun 23, 2019
English summary
Mohammed shami bowled well against us says Afghanistan captain gulbadin naib.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+