Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரால் நாட்டுக்கும், மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாது.. முகமது ஷமிக்கு சப்போர்ட் செய்த டோணி

Recommended Video

ஷமிக்கு ஆதரவாக களமிறங்கிய தோனி- வீடியோ

கொல்கத்தா: முகமது ஷமி மிகவும் நல்லவர், அவரது மனைவிக்கு அவர் துரோகம் செய்து இருக்க மாட்டார் என்று டோணி பேட்டி அளித்துள்ளார்.

முகமது ஷமியின் தம்பி தன்னை வன்புணர்வு செய்ததாக ஷமியின் மனைவி ஹசின் ஜகான் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஷமி தன்னை கொல்ல முயன்றதாக கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார். மனைவிக்கு மனநலம் சரியில்லை என்றுள்ளார்.

முகமது ஷமி மீது ஏற்கனவே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெயிலில் வர முடியாத வகையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

பேசி தீர்க்கலாம்

பேசி தீர்க்கலாம்

இந்த பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முகமது ஷமி முடிவெடுத்துள்ளார். மனைவி தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் இலங்கையில் இருந்து வந்த பின் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப்படுகிறது.

டோணி

டோணி

முகமது ஷமி டோணியின் தலைமையின் கீழ்தான் இந்திய அணியில் சேர்ந்தார். 2013 ஜனவரி 6ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போதில் இருந்து இவர் டோணிக்கு விருப்பமான வீரர்களின் ஒருவராக இருக்கிறார்.

மிகவும் நல்லவர்

மிகவும் நல்லவர்

தற்போது ஷமி குறித்து டோணி பேசி இருக்கிறார். அதில் ''ஷமி மிகவும் நல்லவர். அவரை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும். அவரால் நாட்டிற்கும், அவரது மனைவிக்கும் எந்த துரோகமும் செய்ய முடியாது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

குடும்பம்

குடும்பம்

மேலும் ''இது அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை. இதை ஷமிதான் தீர்க்க வேண்டும். இதை பத்திரிக்கைகள் பெரிதுபடுத்த கூடாது. அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது'' என்றுள்ளார்.

Story first published: Tuesday, March 13, 2018, 13:38 [IST]
Other articles published on Mar 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+