Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

23 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த டெல்லி.. ஷமியின் வெறித்தன பவுலிங்.. DC மானத்தை காப்பாற்றிய இளம் வீரர்

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரு மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள குஜராத் அணியும், கடைசி இடம் பிடித்துள்ள டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய பில் சால்ட் டக் அவுட்டாக, டெல்லிக்கு தொடக்கமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது.

Mohammed shami fiery spell destroys Delhi capitals batting line up

இதுக்கு பற்றாத குறையாக கேப்டன் டேட் வார்னர் 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் 8 ரன்களில் வெளியேற, மணிஷ் பாண்டே 1 ரன்னில் வெளியேறினார். பிரியாம் கார்க் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் டெல்லி அணி 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இது நடப்பு ஐபிஎல் தொடரின் பேட்டிங் செய்யும் அணிக்கு மோசமான பவர்பிளேவாக ஆகும். இதனையடுத்து அக்சர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்த அமன் கான், பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். இதில் அக்சர் பட்டேல் 27 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய அமன் கான் 44 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார்.

Mohammed shami fiery spell destroys Delhi capitals batting line up

இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இறுதியில் ரிப்பல் பட்டேல் 23 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 130 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை தொட்டது. முகமது ஷமி 4 ஓவர் வீசி 11 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, பர்பிள் தொப்பியை வென்றார்.

Story first published: Tuesday, May 2, 2023, 21:24 [IST]
Other articles published on May 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+