Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸில் இருக்கும் ஷமிக்கு கைது வாரன்ட்.. மனைவி தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது கொல்கத்தா நீதிமன்றம்.

ஷமி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் நிலையில், இந்தியாவில் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வழக்கு

2018ஆம் ஆண்டு வழக்கு

கடந்த 2018ஆம் ஆண்டு ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜாஹன் வன்முறையில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில் ஷமி மற்றும் ஷமியின் சகோதரர் பெயரும் இடம் பெற்று இருந்தது.

கைது வாரன்ட் ஏன்?

கைது வாரன்ட் ஏன்?

அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஷமி நேரில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது நீதிமன்றம். அதனால், கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார் ஷமி.

டெஸ்ட் போட்டியில் ஷமி

டெஸ்ட் போட்டியில் ஷமி

ஷமி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார். அந்தப் போட்டி இன்றுடன் (திங்கள்) முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

15 நாள் கால அவகாசம்

15 நாள் கால அவகாசம்

இந்த கைது வாரன்டில் இருந்து ஷமி தப்பிக்க 15 நாள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் அவர் பெயில் கேட்டு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, மேற்கொண்டு காலம் தாழ்த்தாமல் அவர் இந்தியா வர முயற்சி செய்வார் என எதிர்பார்க்கலாம்.

கடும் மோதல்

கடும் மோதல்

ஷமிக்கும் அவரது மனைவி ஹாசின் ஜாஹனுக்கும் கடந்த ஆண்டு கடும் மோதல் வெடித்தது. ஊடகங்கள் முன் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேசி வந்தனர். ஹாசின், ஷமி மீது வன்முறையில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.

கலாட்டா செய்தார்

கலாட்டா செய்தார்

இடையே 2019 ஏப்ரல் மாதம் ஷமி வீட்டுக்கு நள்ளிரவில் சென்று கலாட்டா செய்து, பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இத்தனை சிக்கல்களுக்கு நடுவே தான் ஷமி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

ஷமி பெயிலுக்கு முயல்வார்

ஷமி பெயிலுக்கு முயல்வார்

எனினும், வழக்கு விசாரணைக்கு அவரால் நேரில் வர முடியாத காரணத்தால் தற்போது கைது வாரன்ட் சிக்கலில் சிக்கி உள்ளார். ஷமி பெயில் பெற முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயில் பெறும் முன் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 2, 2019, 19:45 [IST]
Other articles published on Sep 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+