For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு முறை தான் தவறும்.. சொதப்பிய ப்ளானை அதே முறையில் சரிசெய்த முகமது ஷமி.. ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு விக்கெட்கள் மிஸ்ஸாகி ஏமாற்றமடைந்த போதெல்லாம், அதே பாணியில் உடனடியாக விக்கெட்களை அள்ளியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஷமியின் வேகத்தில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

முதல் ஒருநாள் ஆட்டம்

முதல் ஒருநாள் ஆட்டம்

ஆஸ்திரேலிய அணி 161 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என தடுமாறி வந்த போது நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஸ் இங்கிலிஸ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களை மட்டும் பிரித்துவிட்டால் ஆஸ்திரேலியா பாதி சரிந்துவிடும் என முடிவெடுத்த ஷமி பல வேரியஷன்களை காட்டினார். அதன்படி 28வது ஓவரின் போது அவர் வீசிய அவுட் சைட் ஆஃப் பந்தை, பவுண்டரிக்கு அனுப்ப நினைத்தார் இங்கிலிஸ். ஆனால் பந்து மிஸ்ஸாகி கீப்பரிடம் சென்றது. பந்து பேட்டில் பட்டதா என ஷமியே உறுதியாக இல்லாத போது, விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் மிகுந்த நம்பிக்கையுடன் அவுட் என அப்பீல் செய்தார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்தியாவின் டி.ஆர்.எஸ்-ஐ ஏற்று ரிவ்யூவ் செய்து பார்த்த போது, கொஞ்சம் கூட பந்து பேட்டில் படவேயில்லை. இதனால் இந்திய வீரர்களும், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். எனினும் அதற்கு அடுத்த பந்திலேயே கம்பேக் தந்தார் ஷமி. இங்கிலிஸ் கட் ஷாட் ஆடுவதை கவனித்த ஷமி, இந்த முறை சற்று லெந்தை கீழாக வீசினார். அதே போன்ற ஷாட்டை அடிக்க முயன்று, இன்சைட் எட்ஜ் மூலம் ஸ்டம்புகள் பறந்தன.

மற்றொரு விக்கெட்

மற்றொரு விக்கெட்

இதே போல ஆட்டத்தின் 30வது ஓவரில் முகமது ஷமி வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தில் சிக்கி மார்கஸ் ஸ்டோய்னிஸ் தவறவிட்டார். பேட்டில் எட்ஜான பந்து, நேராக ஸ்லிப் திசையில் நின்ற சுப்மன் கில்லிடம் சென்றது. ஆனால் அழகான அந்த கேட்ச்-ஐ தவறவிட்டு சொதப்பினார். ஸ்டோய்னிஸ் போன்ற அதிரடி வீரரின் விக்கெட்டை தவறவிட்டுடோமே என ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அதற்கும் நான் இருக்கிறேன் என துணை நின்றார் ஷமி.

அதே ப்ளான்

அதே ப்ளான்

தான் வீசிய அடுத்த ஓவரிலேயே அதே மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு அதே ஸ்கெட்ச்-ஐ மீண்டும் போட்டார். நன்கு பவுன்ஸ் அதிகமாக வைட் லெந்தில் வீசப்பட்ட அந்த பந்தை ஸ்டோய்னிஸ் அடிக்க நினைத்து மீண்டும் எட்ஜானது. இந்த முறை தவறு செய்ய மாட்டேன் என தெளிவாக இருந்த சுப்மன் கில், நன்கு டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது. மொத்தமாக 6 ஓவர்களை வீசிய ஷமி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை அள்ளினார்.

Story first published: Friday, March 17, 2023, 16:55 [IST]
Other articles published on Mar 17, 2023
English summary
Star pacer Mohammed shami gives a surprise to Fans after he missed the crucial Chance to take wicket in IND vs AUS 1st ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+