For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முகமது ஷமி இதை மட்டும் செய்தால்.. திருமணம் செய்ய நான் ரெடி.. ஓபனாக ப்ரபோஸ் செய்த பாலிவுட் நடிகை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

முகமது ஷமியின் மதல் மனைவி ஹாசின் ஜஹான் சமீபத்தில் அவரது சிறப்பான ஆட்டத்துக்கு வாழ்த்து கூற முடியாது. அவர் நன்றாக ஆடினால் நிறைய பணம் கிடைக்கும். அதற்காக இந்திய அணி வெற்றி பெற மட்டும் வாழ்த்து கூறுகிறேன் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் பாயல் கோஷ் திருமணம் செய்ய தயார் என அறிவித்து இருக்கும் தகவலும் பரவி வருகிறது.

2023 உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி கலக்கி வருகிறார். அவர் இந்த உலகக்கோப்பையில் தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே 14 விக்கெட்களை அள்ளினார். தற்போது நான்கு போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மேலும், இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக பல ஆண்டுகளாக இருக்கிறார் முகமது ஷமி. கிரிக்கெட்டில் அவர் பல வெற்றிகளை குவித்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை கசப்பாகவே உள்ளது.

Mohammed Shami got marriage proposal from Payal Ghosh during world cup 2023

முகமது ஷமி, ஹாசின் ஜஹான் என்பவரை 2014இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2015இல் மகள் பிறந்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் திருமண வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. ஹாசின் ஜஹான், ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்களை கூறினார். ஷமி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூட அவர் புகார் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஷமியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார். அவர் ரிபப்ளிகன் பிரபல அரசியல்வாதியான ராம்தாஸ் அதவாலேவின் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியில் மகளிரணி துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரும், ஷமியை போன்றே மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் தான்.

அவர் ட்விட்டரில், "முகமது ஷமி நீங்கள் நன்றாக ஆங்கிலத்தில் பேசினால், உங்களை திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன்" என கூறி இருக்கிறார். இதை அவர் வேடிக்கையாக கூறினாரா? அல்லது வெளிப்படையாகவே இதை அறிவித்துள்ளாரா? என்பது தெரியவில்லை.

பாயல் கோஷின் இந்த அறிவிப்பை அடுத்து அவரைக் குறித்து பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். பாயல் கோஷ் 1992இல் கொல்கத்தாவில் பிறந்தவர். அவர் நடிகை ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் மும்பை சென்றார். சந்திர சேகர் எலேடியின் பிரயாணம் என்ற படத்தில் முதல் வாய்ப்பை பெற்றார். அதன் பின் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அவர் நடித்தார். 2020இல் அரசியைலில் குதித்த அவர் ராம்தாஸ் அதவாலேவின் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியில் மகளிரணி துணை தலைவராக பதவியை பெற்றார்.

Story first published: Thursday, November 9, 2023, 7:56 [IST]
Other articles published on Nov 9, 2023
English summary
Mohammed Shami got marriage proposal from Payal Ghosh in the middle of world cup 2023. Payal Ghosh is a bollywood actress cum politician.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+