Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Breaking - டி20 உலககோப்பைக்கான இந்திய அணி.. பும்ராவுக்கு பதில் முகமது ஷமி தேர்வு..பிசிசிஐ அறிவிப்பு

மெல்போர்ன் : டி20 உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், முகமது ஷமி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், அவர் இந்திய அணியுடன் கயிற்சியில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் ரிசர்வ் வீரராக முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெறுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

 Mohammed shami is announced as replacement for bumrah in t20 world cup

முகமது ஷமி , ஜூலை மாதத்தில் இருந்தது எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடரில் அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு முழு உடல் தகுதியை எட்டியதால், அவர் பும்ராவுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

முகமது ஷமி, சமீப காலமாக எவ்வித போட்டியிலும் விளையாடாத நிலையில், அவருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உள்ளதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 14, 2022, 16:59 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+