Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் போட்ட கணக்கில் சிக்கல்.. முகமது ஷமி ஆஸி தொடரிலிருந்து விலகல்.. மாற்று வீரர் யார் தெரியுமா?

மொஹாலி : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் மொகாலியில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

டி20 உலக கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தொடர் கருதப்படுகிறது., இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வைத்து பிளேயிங் லெவனை தேர்வு செய்ய ரோகித் கணக்கு போட்டு இருந்தார்.

முகமது ஷமி விலகல்

முகமது ஷமி விலகல்

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு ஆஸ்திரேலிய தொடர் மிகவும் முக்கியமான பரீட்சையாக கருதப்பட்டது. இந்த நிலையில் முகமது ஷமி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரிய வந்தது.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

இதை அடுத்து முகமது ஷமி தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வில் இருக்கிறார். இதனால் முகமது ஷமி ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனை அடுத்து முகமது ஷமிக்கு பதிலாக வேக பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

யார் பந்துவீச்சாளர்கள்

யார் பந்துவீச்சாளர்கள்

எனினும் உமேஷ் யாதவும் காயம் காரணமாக இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி தொடரிலிருந்து விலகி இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்திரேலியா தொடரில் ஹர்சல் பட்டேல், புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற வீரர்களை வைத்து இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு சிக்கல்

இந்தியாவுக்கு சிக்கல்

முக்கியமான கட்டத்தில் முகமது ஷமி கொரோனாவால் விலகி இருப்பது தேர்வு குழுவுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் முகமது ஷமி பந்துவீச்சு எடுபடும் என அனைவரும் கூறிய நிலையில் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலிய அணியிலும் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

Story first published: Sunday, September 18, 2022, 10:34 [IST]
Other articles published on Sep 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+