For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித், கோலியை தொடர்ந்து மற்றொரு சீனியரையும் கழட்டி விட்ட பிசிசிஐ.. IND vs ENG தொடரில் வாய்ப்பில்லை?

மும்பை: இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விலகியதோடு, ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து விராட் கோலியும் பிசிசிஐ-யிடம் தனிப்பட்ட முறையில் ஓய்வை அறிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு அனுபவ வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விலகிய நிலையில், மூன்றாவதாக ஒரு அனுபவ வீரரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் தவிர்க்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அனுபவ வீரர் முகமது ஷமிதான்.

இந்திய டெஸ்ட் அணி அடுத்த தலைமுறை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனினும், வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவுடன் முகமது ஷமி இணைந்து பந்துவீசுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தக் கூட்டணி அச்சுறுத்தலாக அமையும் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.

Mohammed Shami Likely to Be Excluded From India s Test Squad for England Tour Due to Fitness Concerns

ஆனால், தற்போது முகமது ஷமிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் கிடைத்துள்ளது. முகமது ஷமிக்கு காலில் பிரச்சனை உள்ளது. அதற்காக அவர் 2023 உலகக் கோப்பை முதல் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் அவர் மீண்டும் பந்துவீசத் தயாரானார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சிறப்பாகப் பந்து வீசினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றார். ஐபிஎல் தொடரில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அவரது பந்துவீச்சு மிகவும் சராசரியாகவே உள்ளது. எனினும் இந்திய டெஸ்ட் அணியில் ஐபிஎல்-இல் சிறப்பாகச் செயல்பட்டதை வைத்து எந்த ஒரு வீரரையும் தேர்வு செய்வதில்லை.

முகமது ஷமி ஐபிஎல் தொடரில் விக்கெட் வீழ்த்தவில்லை என்பதோ, அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதோ பிரச்சனை இல்லை. மாறாக அவரால் முழு செயல் திறனை வெளிப்படுத்த முடியவில்லை என்பதே பிரச்சனையாக உள்ளது. அவருக்குக் காலில் ஏற்பட்டிருக்கும் காயம் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது. அவரால் முன்பு போல முழு மூச்சில் பந்தை வீச முடியவில்லை.

ஷமி வீசும் பந்து விக்கெட் கீப்பருக்கு நன்றாக பவுன்ஸ் ஆகி செல்வதில்லை. மேலும், இரண்டு ஓவர்கள் வீசினாலே முகமது ஷமி ஓய்வறைக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் டி20 போட்டியில் வேண்டுமானால் அவர் விளையாடலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் வீச வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

எனவே, முகமது ஷமியின் உடல் தகுதியைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரைத் தேர்வு செய்யப் போவதில்லை எனத் தேர்வு குழு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது நிச்சயம் இந்திய அணிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பின்னடைவாக அமையும். மேலும் அழுத்தம் அதிகரிக்கும்.

முகமது சிராஜ் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் சரியாக விக்கெட் வீழ்த்தவில்லை என்றால், அனைத்து அழுத்தமும் பும்ரா மீது விழும். இந்திய அணி பந்துவீச்சில் எப்படி இங்கிலாந்து அணியைச் சமாளிக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Sunday, May 11, 2025, 16:52 [IST]
Other articles published on May 11, 2025
English summary
Mohammed Shami Likely to Be Excluded From India's Test Squad for England Tour Due to Fitness Concerns
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+