ஓ மை காட்.. இது இந்திய அணி தானா? முகமது ஷமி 5 விக்கெட்.. ஆஸ்திரேலியா 300 ரன்கள் பக்கமே போக விடல
மொஹாலி : இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 280 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் ஆரம்பம் முதலே அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.

முகமது ஷமியின் அனல் பறந்த பந்துவீச்சில் தொடக்க வீரர் மிச்சல் மார்ஷ் நான்கு ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து டேவிட் வார்னரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை அமைத்தனர். டேவட் வார்னர் 14 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் தவறவிட, இதனை பயன்படுத்தி கொண்ட வார்னர் அரைசதம் கடந்தார்.
வார்னர் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சை தூக்கி அடித்து கேட்ச் ஆனார். அதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 41 ரன்களில் எட்ஜ் ஆகி ஷமி பந்தில் போல்ட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா அணி 112 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனையடுத்து மார்னஸ் லாபஸ்சேன் நங்கூரம் போட்டு இந்தியாவுக்கு தண்ணீர் காட்டிய நிலையில், அஸ்வினின் ஓவரில் அவர் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கேமிரான் கிரின் தனனுடைய ஐபிஎல் அனுபவத்தை வெளிப்படுத்தி முதலில் மெதுவாக ஒரு அடித்தளத்தை அமைத்து கொண்ட பின்னர் அதிரடியாக ஆடும் தருணத்தில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இறுதியில் ஜாஸ் இங்கிலிஸ் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவின் ரன் குவிக்கும் வேகத்தை உயர்த்தினார்,
பற்றாத குறைக்கு ஸ்டோனிஸ் 5 பவுண்டரிகளை அடித்து 21 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில், அவர் முகமது ஷமி பந்தில் போல்ட் ஆனார். ஜாஸ் இங்லிஷ் 45 ரன்களில் பும்ராவின் புத்திசாலித்தனமான செயல்பாட்டால் ஆட்டமிழந்தார். இறுதியில், சென் அப்பார்டை 2 ரன்னில் ஆட்டமிழக்க, முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


Click it and Unblock the Notifications