Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் இல்லை.. இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர் இவர் தான்.. முகமது ஷமி கருத்து

மும்பை: இந்திய அணியில் தான் விளையாடியதிலேயே ரவி சாஸ்திரி தான் சிறந்த பயிற்சியாளர் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி, கௌதம் கம்பீர், அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய நான்கு பேரில் சிறந்த பயிற்சியாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்கப்பட்டபோது அவர் சாஸ்திரியைத் தேர்வு செய்து, தனக்கு விளையாட முழு சுதந்திரம் அளித்ததற்காக அவரைப் பாராட்டியுள்ளார்.

ஷமியின் சிறந்த டெஸ்ட் ஆட்டத்திறன் சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் தான் வெளிப்பட்டது. விராட் கோலி , சாஸ்திரி, பரத் அருண் கூட்டணியின் கீழ் ஷமி முன்னணியில் இருந்தார். அவரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சீம் பொசிஷனை ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தி, குறுகிய ஓவர் ஸ்பெல்களில் ஷமி பயன்படுத்தப்பட்டார்.

Mohammed shami

"இவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது சற்று கடினம். நான் அண்மைக்காலமாக அதிக போட்டிகளில் விளையாடாததால் கௌதி பாய் பயிற்சியின் கீழ் அதிகம் விளையாடியதில்லை. ராகுல் பாய் மற்றும் அனில் பாய் ஆகியோருடன் நான் நல்ல நேரத்தைச் செலவிட்டுள்ளேன். ஆனால் இந்த நான்கு பேரில் ஒருவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், நான் ரவி பாயை தேர்ந்தெடுப்பேன்."

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராகிறாரா ரவி சாஸ்திரி? முன்னாள் வீரர் சொன்ன கருத்து

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராகிறாரா ரவி சாஸ்திரி? முன்னாள் வீரர் சொன்ன கருத்து

"ஏனெனில் அவர் எனக்குத் தேவையான முழு சுதந்திரத்தை அளித்தார். போட்டியின் போது அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமும் போராட்ட குணமும் மைதானத்திற்கு வெளியிலிருந்தே நமக்கு நன்றாகத் தெரியும்," என்று ஷமி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோலி தலைமையிலான அணியின் தகுதி வரம்புகளை எட்ட ஷமி மேற்கொண்ட கடுமையான உடல் உழைப்பு, அவரை மேலும் சிறந்த வீரராக மாற்ற உதவியது. இருப்பினும், 2023 உலகக் கோப்பிற்குப் பிறகு, அவரது உடற்தகுதி மற்றும் தேர்வாளர்களின் ஆதரவு ஆகியவை சாதகமாக இல்லாத காரணங்களால் அவர் இந்திய அணியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடரை 2-0 வென்றால், WTC பட்டியலில் இந்திய அணி எவ்வளவு புள்ளிகள் பெறும்?

Also Read

இலங்கை தொடரை 2-0 வென்றால், WTC பட்டியலில் இந்திய அணி எவ்வளவு புள்ளிகள் பெறும்?

எதிர்காலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை வழிநடத்த அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 15 இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட குழுவை தேர்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இதில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை.அனைத்து வகை போட்டிகளிலும் விளையாடத் தேவையான உடற்தகுதியுடன் இருப்பதாக ஷமி தொடர்ந்து கூறி வந்தாலும், தேர்வாளர்களோ அல்லது அணி நிர்வாகமோ அதை ஏற்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

Story first published: Tuesday, August 4, 2026, 23:11 [IST]
Other articles published on Aug 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+