Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாற்காலி மேல் நிற்க சொன்ன யுவராஜ்.. தோற்றுவிட்டு டான்ஸ் ஆடிய தவான்.. முகமது ஷமி பகிர்வு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் வேடிக்கையான நபர் யார் என்பது குறித்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சுவாரஸ்யமான ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் தான் அணியில் மிகவும் நகைச்சுவையான மனிதர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல இந்திய அணியில் தனது முதல் நாள் அன்று யுவராஜ் சிங் செய்த விஷயம் ஒன்றையும் பகிர்ந்தார் ஷமி.

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது ஷமியும், ஷிகர் தவானும் இந்திய அணிக்காக இணைந்து விளையாடியுள்ளனர். முகமது ஷமி வேகப்பந்து வீச்சில் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் தவான் இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரராக மாறி இருந்தார். பேட்டி ஒன்றில் தவான் பற்றி பேசிய முகமது ஷமி, "தவான் எப்போதும் மிகவும் வேடிக்கையான மனிதர். ஒரு போட்டியில் நாங்கள் தோற்றுவிட்டால், ஒட்டுமொத்த அணியும் உடைமாற்றும் அறையில் சோகமாக அமர்ந்திருக்கும். ஆனால், தவான் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைப்பார்" என்றார்.

Mohammed Shami recalls Indian dressing room moments involving Yuvraj Singh and Shikar Dhawan

"அப்போது தவான் திடீரென சத்தமாக சிரிக்கத் தொடங்குவார். ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டால், நாம் தோற்றுவிட்டோம் அதனால்தான் என்பார். எப்போது வேண்டுமானாலும் மேஜை மீது ஏறி நின்று பஞ்சாபி பாடலுக்கு நடனமாடத் தொடங்கிவிடுவார். இந்த செயல்கள் உடைமாற்றும் அறையில் உள்ள சோகமான சூழலை மாற்றி, மகிழ்ச்சியை உருவாக்கும். வெற்றி, தோல்வி என்பது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். எனவே யாரும் சோகமாக இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார்" என்று ஷமி கூறினார்.

இதே நேர்காணலில், இந்திய அணியில் தான் முதன்முதலில் இணைந்தபோது நடந்த சுவாரஸ்ய அனுபவத்தையும் ஷமி பகிர்ந்துள்ளார். "நான் முதன்முதலில் இந்திய அணியில் இணைந்தபோது, போட்டிக்கு முந்தைய நாள் நடந்த அணி கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கு நான் கனவில் கூட பார்க்க நினைத்த பல முன்னணி வீரர்கள் அமர்ந்திருந்தனர். நான் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருந்தேன்.

ஐபிஎல் அணிகள் செயலால் காயத்துடன் ஆடும் இந்திய வீரர்கள்.. அதிர வைத்த பிசிசிஐ அதிகாரி

ஐபிஎல் அணிகள் செயலால் காயத்துடன் ஆடும் இந்திய வீரர்கள்.. அதிர வைத்த பிசிசிஐ அதிகாரி

அப்போது யுவராஜ் சிங் என்னை நாற்காலியின் மீது ஏறி நின்று பேசுமாறு கூறினார். அவரது பேச்சை என்னால் தட்ட முடியவில்லை. நாற்காலியில் ஏறி நின்றதும், முன்னணி வீரர்களைப் பார்த்த பதற்றத்தில் எனக்கு எல்லாமே மறந்துவிட்டது. என்ன பேசுவது என்று தெரியாமல், எனது பெயர் மற்றும் எனது ஊரின் பெயரை மட்டுமே கூறிவிட்டு வந்து அமர்ந்துவிட்டேன்" என்று முகமது ஷமி தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

“2027 உலகக்கோப்பையில் ஆடுவது என்..”.. இந்திய அணிக்கு திரும்புவது குறித்து புவனேஸ்வர் குமார் பதில்

Also Read

“2027 உலகக்கோப்பையில் ஆடுவது என்..”.. இந்திய அணிக்கு திரும்புவது குறித்து புவனேஸ்வர் குமார் பதில்
Story first published: Monday, August 10, 2026, 9:57 [IST]
Other articles published on Aug 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+