Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலக டி-20 அணியில் ஹார்திக் பாண்டயாவுக்கு பதிலாக ஷமி!

Recommended Video

ஐசிசி- யின் உலக அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஷமி- வீடியோ

டெல்லி: இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடும் ஐசிசி உலக லெவன் அணிக்காக ஹார்திக் பாண்டயாவுக்கு பதிலாக முகமது ஷமி விளையாட உள்ளார்.

கடந்த ஆண்டில் இர்மா மற்றும் மரியா புயல்கள் வீசியதில், வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஐசிசி உலக அணிகள் இடையே ஒரு டி-20 போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.

Mohammed shami replaces Hardik pandya in icc world 11 team

ஐசிசி அங்கீகாரம் வழங்கியுள்ள இந்த ஆட்டம், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், நாளை நடக்க உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது அணியை அறிவித்துள்ளது.

கார்லோஸ் பிராத்வொயிட், சாமுவேல் பாத்ரி, ராயட் எம்ரிட், ஆந்த்ரே பிளெட்சர், கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மான் பாவெல், டேனிஷ் ராம்தின், ஆந்தரே ரசல், மார்லான் சாமுவேல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறுகின்றனர்.

உலக லெவன் அணிக்காக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாததால் பாண்டயா விலகினார். அவருக்குப் பதிலாக முகமது ஷமி விளையாடுகிறார்.

இதர உலக லெவன் அணியின் கேப்டனாக இங்கிலாந்து அணியின் இயான் மார்கென் அறிவிக்கப்பட்டிருந்தார். கைவிரலில் ஏற்பட்ட எலும்புமுறிவை அடுத்து அவர் விலகியுள்ளார். பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி உலக லெவன் அணிக்காக விளையாடும் வீரர்கள்:

ஷாகித் அப்ரிதி (பாகிஸ்தான், கேப்டன்), தினேஷ் கார்த்திக், முகமது ஷமி (இந்தியா), மிச்சைல் மெக்லிகன், லூக் ரோஞ்சி (நியூசிலாந்து), திசாரா பெரீரா (இலங்கை), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), ஷோயப் மாலிக் (பாகிஸ்தான்), தமிம் இக்பால் (வங்கதேசம்), சந்தீப் லாமிச்சனே (நேபாளம்), ஆதில் ரஷீத், சாம் பில்லிங், சாம் குர்ரான், தைமால் மில்ஸ் (இங்கிலாந்து).

Story first published: Wednesday, May 30, 2018, 14:04 [IST]
Other articles published on May 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+