Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யை சுருட்டியது எப்படி.. ஷமி, ஹர்திக் செய்த மாஸ்டர் பிளான்..உழைப்புக்கு கிடைத்த வெற்றி என கருத்து

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி 188 ரன்களில் சுருட்டியது.

அதில் முகமது சமி மூன்று விக்கெட்டுகளையும் ,சிராஜ் 3 விக்கெட் களையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமே இல்லாத ஆடுகளத்தில் இவ்விரண்டு வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

கடும் உழைப்பு

கடும் உழைப்பு

இதில் இந்திய அணி செய்த மாஸ்டர் கிளாஸ் பிளான் ஒன்று சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இந்தியாவுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தது. இதுகுறித்து பேசிய முகமது சமி நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். உடல் தகுதியை சரியாக பார்த்துக் கொள்ள நாங்கள் கடும் பயிற்சி செய்து வருகிறோம். வலைப்பயிற்சியில் தொடர்ந்து பந்துவீசி கடும் உழைப்பை செலுத்தி வருகிறேன்.

ஸ்லிப் ஃபில்டர்

ஸ்லிப் ஃபில்டர்

பந்து வீசும் முறை பவுன்ஸ் மற்றும் பந்தை பிடிக்கும் முறை அனைத்தும் சரியாக இருந்தால், உங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைக்கும். மும்பை ஆடுகளத்தில் எப்போதுமே பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். இதனால் நான் சரியான பகுதியில் பந்து வீசி நல்ல பலனை பெற்றேன். நான் ஹர்திக் பாண்டியா விடம் சென்று ஸ்லீப்பில் ஒரு ஃபீல்டர் வேண்டும் என்று கேட்டேன்.

ஷமி பிளான்

ஷமி பிளான்

ஏனென்றால் பந்து கொஞ்சம் ஸ்விங்கானது போல் தெரிந்தது. இதனால் ஆப்ஸ்டெம்ப் நோக்கி தொடர்ந்து பந்து வீசினால் நிச்சயமாக ஆஸ்திரேலியா வீரர்கள் ஆட்டம் இழப்பார்கள் என்று எனக்கு தெரியும். களத்தில் உள்ள அனைவரும் பங்காற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதன் மூலம் ஒரு வீரரின் உத்வேகமும் கடுமையாக உயரும். நாங்கள் ஆஸ்திரேலியாவை 188 ரன்களில் சுருட்டி சிறப்பாக விளையாடியிருக்கிறோம்.

அபாரம்

அபாரம்

இந்த இலக்கை எங்கள் அணி வீரர்கள் வெற்றிகரமாக துரத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ச்ன்று சமி கூறினார். சுழற் பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் அடிக்க தொடங்கியவுடன் ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைத்ததுடன் மட்டுமல்லாமல் ஸ்லீப்பில் ஒரு வீரரை நிற்க வைத்தார். இதன் காரணமாக இந்திய அணி அடுத்தடுத்து ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை வீழ்த்தியது.

Story first published: Friday, March 17, 2023, 18:28 [IST]
Other articles published on Mar 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+