Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொதுவெளியில் படு கவர்ச்சி.. ஷமியின் மனைவி வெளியிட்ட புகைப்படம்.. ஆபாசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி வெளியிட்டுள்ள குட்டைப்பாவடை புகைப்படம் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரராக வலம் வருபவர் முகமது ஷமி. சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கூட அசத்தியிருந்தார்.

இந்நிலையில் ஷமியின் மனைவி ஹசின் போட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

ஷமி குடும்பம்

ஷமி குடும்பம்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் ஹசின் ஜஹானுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐரா என்ற மகளும் உள்ளது. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது கணவரும், அவரது பெற்றோரும், தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஹசின் ஜஹான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து இருவரும் பிரிந்தனர்.

க்ளேமரஸ் புகைப்படங்கள்

க்ளேமரஸ் புகைப்படங்கள்

கணவனை பிரிந்த பின்பு மாடலிங் துறையில் ஈடுபாடு காட்டிய ஹசின் ஜஹான் அவ்வபோது மார்டன் ஆடைகளை அணிந்தவாறு புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார். இவர் அணியும் ஆடைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் தற்போது போட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்றால் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

புதிய புகைப்படம்

புதிய புகைப்படம்

ஹசின் ஜஹான் சமீபத்தில் கடற்கரையோரம் படகு ஒன்றில் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் சிகப்பு நிறத்திலான மிகவும் குட்டையான பாவாடையை அவர் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பதற்கு ரசிகர்கள் இதயங்களை பறக்கவிட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

அவரின் பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் சிலர், இந்தியாவின் புகழ்பெற்ற பந்துவீச்சாளராக முகமது ஷமி இருந்து வருகிறார். அவரின் மனைவியாக இருந்துக்கொண்டு இப்படியா பொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துக் கொண்டு நிற்பது என விமர்சித்துள்ளனர். குறிப்பாக மத விதிமுறைகளுக்கு எதிராக அவர் நடந்துக்கொள்வதாக கூறி சாடி வருகின்றனர்.

Story first published: Saturday, July 10, 2021, 20:26 [IST]
Other articles published on Jul 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+