Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமியின் மனைவி போட்ட கவர்ச்சி புகைப்படம்... மத ரீதியாக தாக்கும் நெட்டிசன்கள்.. வெடித்த சர்ச்சை!

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்கள் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி அட்டகாசமாக பந்துவீசி ட்ரெண்டானார்.

இவரை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்த நெட்டிசன்கள் தற்போது அவரது மனைவி மீது கடும் கோபத்தை காட்டி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் ஷமி

கிரிக்கெட் வீரர் ஷமி

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் ஆவார். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது கணவரும், அவரது பெற்றோரும், தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஹசின் ஜஹான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து இருவரும் பிரிந்தனர்.

க்ளாமரஸ் புகைப்படங்கள்

க்ளாமரஸ் புகைப்படங்கள்

அதன் பிறகு மாடலிங் துறையில் கால்பதித்த ஹசின் ஜஹான் அவ்வபோது தனது சமூக வலைதளபக்கத்தில் மார்டன் ஆடைகளை அணிந்தவாறு புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார். இவர் அணியும் ஆடைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் தற்போது போட்டுள்ள புகைப்படம் ஒன்றால் ரசிகர்கள் அவர் மீது மதரீயதியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

ஹசின் ஜஹான் சமீபத்தில் கருப்பு நிற ஆடை ஒன்றை அணிந்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது சற்று கவர்ச்சியான புகைப்படம் போன்று இருந்ததால், அவர் தனது மத விதிமுறைகளை மீறி இதுபோன்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக, படுமோசமாக விமர்சனம் செய்துள்ளனர். அவருக்கு கொலை மற்றும் பாலியல் தொந்தரவு அளிக்கும் வகையிலும் மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது.

ராமர் கோயில் பூஜை

ராமர் கோயில் பூஜை

ஹசின் ஜாஹனுக்கு கொலை மிரட்டல் வருவது புதிதல்ல. கடந்தாண்டு அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது, ஹசின் ஜாஹன் வாழ்த்துக்கள் கூறி பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதனை பார்த்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலர் அவரை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியும், விமர்சித்தும், சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 27, 2021, 18:39 [IST]
Other articles published on Jun 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+