Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ஓவரில் நடந்த ட்விஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு ஷாக் கொடுத்த முகமது ஷமி.. இந்தியா த்ரில் வெற்றி!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

இரு அணிகளும் மோதிய இந்த போட்டி பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள காப்பா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கடின இலக்கு

கடின இலக்கு

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான பேட்டிங் அமைந்தது. ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் அடித்து அசத்த மற்ற வீரர்கள் அதிரடி காட்ட முயன்று குறைந்த ரன்களுக்குள் விக்கெட்டை இழந்தனர். குறிப்பாக ரோகித் சர்மா 15, விராட் கோலி 19, ஹர்திக் பாண்ட்யா 2 என சொதப்பினர். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

 ஆச்சுறுத்திய ஆஸி

ஆச்சுறுத்திய ஆஸி

187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அச்சுறுத்தல் கொடுத்தது. ஓப்பனிங் வீரர்கள் மிட்செல் மார்ஷ் 35 ரன்கள் - ஆரோன் ஃபிஞ்ச் 76 ரன்களும அடிக்க, அந்த அணி 97 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து சிறப்பான நிலையில் இருந்தது. இதன்பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களும், க்ளென் மேக்ஸ்வெல் 23 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 171/4 என வலுவான நிலையில் இருந்தது.

திடீரென ட்விஸ்ட்

திடீரென ட்விஸ்ட்

கடைசி 12 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே தேவை என இருந்த சூழலில் பெரும் ட்விஸ்ட்டை கொடுத்தது இந்திய அணி அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் முதல் பந்திலேயே நன்கு செட்டில் ஆகியிருந்த ஃபிஞ்ச் நடையை கட்டினார். இதற்கு அடுத்த பந்திலேயே டிம் டேவிட் ரன் அவுட்டாகி வெளியேற ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே வந்தது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் தேவை என இருந்த போது, திடீரென முகமது ஷமி பந்துவீச வந்தார். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் 4 ரன்கள் கசிய அடுத்த 4 பந்துகளும் விக்கெட்கள் மட்டுமே வந்தன. பேட் கம்மின்ஸ், ஆஸ்வின் ஆகர், ஜோஸ் இங்கிலிஸ், கேன் ரிச்சர்ட்சன் என அடுத்தடுத்து அவுட்டாக 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சிறப்பாக பந்துவீசிய ஷமி 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Story first published: Monday, October 17, 2022, 16:46 [IST]
Other articles published on Oct 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+