Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாட்டுப் பாடி டான்ஸ் ஆடிய ஷமி மனைவி.. டிரோல் செய்து ஓட்டிய ரசிகர்கள்.. எதுக்கு இந்த விளம்பரம்!

டெல்லி: இந்திய பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் இன்ஸ்டாகிராமில் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி ஒரு டிக்டாக் வீடியோ போட்டுள்ளார். இதை வைத்து பலரும் அவரை டிரோல் செய்து கொண்டுள்ளனர்.

Recommended Video

டிக் டாக் வீடியோ வெளியிட்ட ஷமியின் மனைவி... கலாய்த்த ரசிகர்கள் - வீடியோ

ஷமியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார் ஹசின். கடந்த 2018ம் ஆண்டு ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குடும்ப வன்முறை புகாரைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஹசின். அதன் பின் தொடர் சர்ச்சைகள்தான்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார் ஷமி மனைவி ஹசின். அது டிக்டாக் செய்து போட்டுள்ள வீடியோவாகும். இது ஷமியின் ரசிகர்களின் கேலி கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

ஹசின் டான்ஸ்

ஹசின் டான்ஸ்

ஒரு இந்திப் பாடலுக்கு டான்ஸ் ஆடி அதை டிக்டாக் செய்து போட்டுள்ளார் ஹசின். ஆனால் இதை வைத்து கிண்டிலடித்துக் கொண்டுள்ளனர் ஷமியின் ஆதரவாளர்கள். அதேசமயம், ஹசினுக்கு வேண்டியவர்கள் இதை வரவேற்றுள்ளனர். ஹசின் இப்போதுதான் ரிலாக்ஸ் ஆகியுள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஷமி ரசிகர்கள்தான் வந்து வந்து ஓட்டிக் கொண்டுள்ளனர்.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

பல ரசிகர்கள் ஷமி - ஹசினின் தனிப்பட்ட வாழ்வு குறித்து கமெண்ட் போட்டுள்ளனர். ஷமியிடம் ஹசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர். பலர் உங்களால் ஷமி மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால் நிச்சயம் அதற்கான விலையை நீங்கள் தர வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளனர்.

ஷமியின் விரக்தி பேட்டி

ஷமியின் விரக்தி பேட்டி

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மாவுடன் ஷமி பேசிய லைவ் சாட்டின்போது தான் 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், குடும்பப் பிரச்சினையால் தான் மிகவும் நொந்து போய் விட்டதாகவும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். எனக்கு எனது குடும்பம் ஆதரவாக இருக்கவில்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது. மிகவும் ஸ்டிரஸ்ஸாக இருந்தேன் என்று அப்போது கூறியிருந்தார் ஷமி.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

ஹசின் - ஷமி மோதல் காரணமாக ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை 2018ம் ஆண்டில் சிலகாலம் பாதிக்கப்பட்டது. அவரது காண்டிராக்டை கூட பிசிசிஐ ரத்து செய்து விட்டது. வழக்கு, மோதல், பதில் என்று ஷமி அலைய நேரிட்டு விட்டது. அதன் பிறகுதான் சற்று எல்லாம் ஓய்ந்து ஷமி மீண்டும் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார். தற்போது லாக்டவுன் காரணமாக அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ளனர்.

Story first published: Tuesday, May 5, 2020, 18:09 [IST]
Other articles published on May 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+